உங்கள் வீட்டில் உள்ளோர் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் உங்களுக்கு நல்ல சுவையில் பாஸ்தா செய்யத் தெரியாதா? பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம்.
அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் மசாலா பாஸ்தாவை செய்யலாம்.
பாஸ்தாவை இன்னும் சத்தானதாக மாற்ற, அவற்றுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். பாஸ்தாவை காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் சாப்பிலாம்.
பாஸ்தாவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ளதால் இது நம் உடலின் செயல்பாட்டுக்கு எரிபொருளாக அமைகிறது.
சிலர் பாஸ்தாவை சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணமே அதில் உள்ள அதிகப்படியான கார்போ ஹைட்ரேட் தான்.
பாஸ்தாவில் ப்ரோடீன், மினரல்ஸ், நார்சத்து உள்ளிட்ட பல நன்மைகளும் அடங்கியுள்ளது. இவை அனைத்தும் பாஸ்தாவின் தரத்துக்கு ஏற்றவாறு மாறுபடும். ஆதாவது பாஸ்தா பல வடிவங்களில் விற்கப்படுகிறது.
சங்கு, நூடுல்ஸ் உள்ளிட்ட பல டிசைன்களில் பாஸ்தா விற்கப்படுகிறது. ேற்கத்திய நாடுகளில் பாஸ்தாவை கோதுமை பயன்படுத்தி தயாரிக்கின்றனர். சில இடங்களில் மைதா மாவை பயன்படுத்தி பாஸ்தா தயாரிக்கப்படுகிறது.
இவை இரண்டுக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளன. கோதுமை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாஸ்தாவில் அதிகளவு ஊட்டச்சத்து அடங்கியுள்ளது.
உடலுக்கு தேவையான சக்தியை கோதுமை பாஸ்தா தருகிறது. மைதா மாவில் தயாரிக்கப்பட்ட பாஸ்தா உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதில்லை. இன்னும் சொல்லப்போனால் மைதா பாஸ்தா உடல் எடையை அதிகரிக்கச் செய்து விடும்.
இரத்தத்தில் சக்கரையின் அளவையும் அதிகரித்து விடும். ஆகையால் எந்த வகை பாஸ்தாவை எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் கவனம் வேண்டும்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
தேவையானவை :
பாஸ்தா - 2 கப்
தக்காளி - 1/4 பாகம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
முட்டை - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
குடை மிளகாய் - 1/4 பாகம்
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் அபாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, குடை மிளகாய், தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக சேர்த்து வதக்கவும்.
அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ஆபத்து !
அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் போடவும். நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும். முட்டை நன்றாக வதங்கியதும் வெந்த பாஸ்தா சேர்த்து சுருள விட்டு அடுப்பை அணைக்கவும்.
தேவை என்றால் காய்கறிகள் சேர்க்கலாம், சால்னா கூட சேர்க்கலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.