முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது.
அவை உயர்தர புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. கூடுதலாக, முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆண்டி - ஆக்ஸிடண்டுகள் உள்ளன.
ஒரு முட்டையைச் சரியாக வேக வைக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். இதற்கு மேல், முட்டையை அதிக நேரம் வேக வைக்கக் கூடாது.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முட்டையை வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். முட்டையைப் பொரியல், ஆம்லெட், அல்லது அரைவேக்காடான நிலையில் சாப்பிடக் கூடாது.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் முட்டை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை அதிகரிக்கிறது.
எனவே சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் முட்டைகளை சாப்பிடக் கூடாது. ஏற்கனவே அதிக எடை கொண்டவர்கள் முட்டையை சாப்பிடக்கூடாது.
தேவையானவை :
முட்டை - 3
வெங்காயம் - 3
உப்பு - தேவைக்கு ஏற்ப
மிளகாய் தூள் - தேவைக்கு ஏற்ப
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிற மாகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் தக்காளியை போட்டு நன்கு குழையும் வரை வதக்கவும்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கிய வுடன் கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். ஊற்றியவுடன் அடிப்பிடித்துக் கொள்ளாமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பின் அதை கொத்தி கொத்தி சிறு சிறு துண்டுகளாக கொத்து பரோட்டா போல் கொத்தவும். முட்டை நன்கு சிறு சிறு துண்டுகளான பின் அடுப்பை அணைத்து வேறு பாத்திரத்தில் வைத்து அலங்கரிக்கவும்.
சுவையான முட்டை பூஜ்யா ரெடி