பருப்பு வகைகள், வாழைப்பழம், ஆப்பிள், முழு தானியங்கள், பார்லி, பச்சை பட்டாணி, ராகி, பாதாம், வெள்ளரிக்காய், ப்ரோக்கோலி போன்ற உணவுகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் செரிமான செயல் முறையை மேம்படுத்தலாம்.
நார்ச்சத்துக்கள் நிறைந்த பயறு பருப்பு வகைகள், பெர்ரி வகைகள், முழு தானியங்கள், நட்ஸ் போன்ற உணவுகள் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கின்றன.
இந்த உணவுகளை உங்கள் தினசரி உணவு வழக்கத்தில் சேர்த்து வர செரிமான செயல்முறை சீராக நடைபெறும். இதனுடன் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகளை குறைக்க உதவுகின்றன. பீன்ஸ், ஆளி விதைகள் போன்ற உணவுகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளை குறைக்கின்றன.
இவை உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், அழற்சியை குறைக்கவும் உதவுகின்றன. இதனால் இதய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
என்னென்ன தேவை?
கேழ்வரகு, கம்பு, சோளம் - தலா 1/2 கப்,
சிவப்பு அரிசி, பொடித்த வெல்லம் - தலா 1/4 கப்,
பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
நெய் - தேவைக்கு,
தேன் - 4 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் பல் பல்லாக உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அரிசி, தானிய வகைகளை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் மாவாக அரைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி, மாவில் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைக்கவும்.
பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேங்காய் துண்டுகள், உப்பு கலந்து சற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் நெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து, தேனை பரவலாக ஊற்றி பரிமாறவும்.
குறிப்பு:
இனிப்பு வேண்டாமென்றால் மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், கொத்த மல்லி, பச்சை மிளகாய், மிளகு, கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை, தேங்காய்ப்பல் சேர்த்து காரமாக செய்யலாம்.