பண்டிகை காலங்களுக்காக மட்டுமே ஒதுக்க வைத்து விட்ட பொருள் தான் அவல். ஆனால், தினந்தோறும் சாப்பிடக் கூடிய அத்தனை சத்துக்களும் இந்த அவலில் உள்ளன என்பது தான் ஆச்சரியமான விஷயம்.
நெல்லை பதப்படுத்தி இடித்து பெறப்படக் கூடியது தான் இந்த அவல்.. அதாவது, நெல்லை ஊற வைத்து இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி, அவலாக பயன்படுத்தப் படுகிறது.
இப்படி கைக்குத்தல் முறையில் தயாரிக்கப் படுவதால் தான், ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இந்த அவலில் நிறைந்துள்ளன.
நிறைய நார்ச்சத்துக்களும், வைட்டமின் B, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இந்த அவலில் நிறைந்துள்ளன.
பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து தயாரிக்க படுவதால், முழு சத்துக்களும் இந்த அவலில் நிறைந்துள்ளன. இதில் சிவப்பு அவல், வெள்ளை அவல் என்று 2 வகைகள் உண்டு.
சிவப்பு அரிசியில் இருந்து சிவப்பு அவல் மற்றும் வெள்ளை அரிசியில் இருந்து வெள்ளை அவல் தயாரிக்கப் படுகிறது. இந்த இரண்டிலுமே சத்துக்கள் உள்ளது என்றாலும், சிகப்பு அவலில் சற்று கூடுதலாகவே சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆந்தோசயனின் என்ற நிறமி தான் இந்த அரிசிக்கு இந்த நிறத்தை தருகிறது. இந்த அவலை காலை டிபனில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள். குறிப்பாக, கோதுமை அவல் சாப்பிட சொல்கிறார்கள்.
பல்வேறு சத்துக்கள் இந்த அவலில் உள்ளதால், காலை உணவில் சாப்பிடும் போது, நாள் முழுவதும் தேவைப்படும் சத்துக்கள் இதன் மூலம் கிடைத்து விடுகின்றன.
தேவையானவை:
அவல் -200 கிராம்,
அரிசி - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
கடுகு, இஞ்சி துருவல் சிறிது,
மிளகாய் - 1.
செய்முறை:
அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊற வைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும்.
தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.
தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.
தேங்காய் சட்னி:
ஒரு கப் தேங்காய்த் துருவலுடன்,
பச்சை மிளகாய் - 1,
பொட்டுக் கடலை - 4 டீஸ்பூன்,
உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
அவல் தோசைக்கு அருமையான சைடுடிஷ்.