கடலைப்பருப்பு அல்வா செய்வது எப்படி?





கடலைப்பருப்பு அல்வா செய்வது எப்படி?

0
சுவையான தானியங்களில் கடலைப் பருப்புக்குத் தனியிடம் உண்டு. கடலைப்பருப்பு என்பது சுண்டல் பயறிலிருந்து உருவாக்கப்படும் உணவுப் பொருளாகும். 
கடலைப்பருப்பு அல்வா செய்வது எப்படி?
இது மஞ்சள் நிறத்துடன் இருக்கும். இதை ஊற வைத்து அரைத்து வடை சுடுவார்கள். சட்னி, துவையல் செய்யப் பயன்படும். பூமிக்கு மேலே விளையும் பருப்பு வகைகளில் ஒன்றான கடலைப் பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. 

ருசியான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி?

இவற்றை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து உண்பதுடன், தனியாக சமைத்து உண்டால் இன்னும் அதிகமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். கடலை மாவு தோல் சம்மந்தமான பிரச்சனைக்ளுக்கு தீர்வு தருகிறது. 

குறிப்பாக, தோலில் சுருக்கம், சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை விரைவில் நீக்கும் தன்மை கொண்டவையாக இவை உள்ளன.

கடலை பருப்பில் காணப்படும் புரதச் சத்து செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியம். எனவே, இவற்றை குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வரலாம். 

உடல் எடை பெருக்கவும், நல்ல செரிமானத்திற்கும் கடலை பருப்பு உதவுகிறது.
முளை கட்டிய கடலைப்பருப்பை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.

தேவையானவை:

கடலைப் பருப்பு – 200 கிராம்,

வெல்லம் – 300 கிராம்,

புழுங்கல் அரிசி – ஒரு கப், 

பால் – ஒன்றரை கப்,

துருவிய தேங்காய் – 2 கப், 

சர்க்கரை – அரை கப், 

ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை,

நெய் – 8 டேபிள் ஸ்பூன், 

முந்திரிப் பருப்பு – 10 (துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்),

சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.

செய்முறை:
கடலைப்பருப்பு அல்வா
புழுங்கல் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் சேர்த்து நைஸாக அரைக்கவும். கடலைப் பருப்பை அளவான நீர் விட்டு வேக வைக்கவும்.

அரைத்த அரிசி மாவுடன் பால் சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து நன்றாக கிளறி, ஓரளவு வெந்ததும் வேக வைத்த கடலைப் பருப்பையும் அதில் சேர்த்துக் கிளறவும்.
பிறகு, துருவிய வெல்லம், சர்க்கரை இரண்டையும் சேர்க்கவும். இடையிடையே நெய் விட்டுக் கிளறி, இறுதியில் ஏலக்காய்த் தூள், ஃபுட் கலர் சேர்க்கவும். 

பளபளவென்ற பதம் வந்ததும் இறக்கி, முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)