இளைஞர்களுக்கு பிடித்த பிரட் பன்னீர் உருண்டை செய்வது எப்படி?





இளைஞர்களுக்கு பிடித்த பிரட் பன்னீர் உருண்டை செய்வது எப்படி?

0
இளைஞர்களின் உணவுகளில் அதிமுக்கிய இடம் பிடித்திருக்கும் ஒரு உணவு என்றால் அது பன்னீர் தான். எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும். 
இளைஞர்களுக்கு பிடித்த பிரட் பன்னீர் உருண்டை செய்வது
பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளப் படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. 

அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக பன்னீர் மாறி விட்டது. ஏனெனில் இறைச்சியை கொண்டு சமைக்கக் கூடிய அனைத்து விதமான உணவுகளையும் பன்னீர் கொண்டு நாம் சமைக்கலாம். 

ஆண்களுக்கு ஏற்படும் விந்தணுக்கள் தொடர்பான பிரச்சினைகளான உற்பத்தி குறைவு, தரம் குறைவு போன்ற பிரச்சினைக்ளுக்கு ஜிங்க் மிகச்சிறந்த மருந்தாகும். 

எனவே பன்னீரை தொடர்ந்து உணவில் சேர்ப்பது ஆண்மை குறைவிற்கான மிகச்சிறந்த தீர்வாகும். இன்று நாம் பன்னீருடன் பிரட் சேர்த்து எப்படி? பிரட் பனீர் உருண்டை செய்வதென்று பார்ப்போம்.

தேவையானவை:

பிரட் ஸ்லைஸ் – 10 (ஓரம் நீக்கவும்),

துருவிய பனீர் – 100 கிராம்,

உருளைக்கிழங்கு – ஒன்று (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்),

மிளகாய்த் தூள், உப்பு, மல்லித் தழை – சிறிதளவு, 

எண்ணெய் – 200 கிராம்.

செய்முறை:
பிரெட் பன்னீர் உருண்டை
துருவிய பனீர், மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, மிளகாய்த் தூள், மல்லித்தழை ஆகிய வற்றை சேர்த்து சிறிய உருண்டை களாக உருட்டவும். பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்து உடனடியாக உள்ளங்கையில் வைத்து பிழிந்து, 

பனீர் மசாலா உருண்டையை அதில் வைத்து, நன்கு உருட்டி, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். பிரட் பன்னீர் உருண்டை ரெடி.

பொதுவாக பன்னீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பன்னீரை நீங்கள் பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிட்டு வரலாம். எப்படி செய்தாலும் இது சுவை மிகுந்தது. 

இது எப்படி சுவை வாய்ந்ததோ அதைப் போல் சத்துக்களும் நிறைந்த ஒன்று. பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். 

ஆனால் இதைத் தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.  மேலும் இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 
உங்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் உதவுகிறது. செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. 

இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)