வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும். ஞாபகச்தி அதிகரிக்கும்.
வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.
உடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப் பட்டாணி. எனவே, தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.
ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை பட்டாணியில் மக்னீசியம் சத்துக்கள் அதிகமுள்ளது.
பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது. பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது.
தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள்.
பச்சைப் பட்டாணியில் எந்த உணவு வகை தயாரித்தாலும் எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா? இந்த கிரீன் பீஸ் புலாவ் உணவும் தயாரித்துப் பாருங்கள் ரொம்ப சுவையாக இருக்கும்.
குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?
காரட்டும் கலந்து தயாரிப்பதால் பார்ப்பதற்கு ரொம்பவும் கலர் புல்லாக சாப்பிடத் தூண்டும். செய்முறை இதோ!
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – ஒரு கப்
பச்சைப் பட்டாணி – 1/2 கப்
நறுக்கிய காரட் துண்டுகள் – 1/2 கப்
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 6 பல்
பெரிய வெங்காயம் – 1
பட்டை கிராம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் + நெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
இஞ்சி, பூண்டு இவைகளை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் இவைகளை நீள வாக்கில் மெல்லிய தாக நறுக்கவும். காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்புத் தூள் போட்டு வெடிக்க விட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.
குடிப்பழக்கத்தால் ஏற்படும் மூளைக் கோளாறுகள் !
தொடர்ந்து வெங்காயம், பச்சை மிளகாய், காரட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
இத்துடன் அரிசி சேர்த்துக் கிளறி, சற்று வறுபட்டதும் குக்கருக்கு மாற்றி 2 கப் தண்ணீர் (அரிசி ஒரு கப் எனில் தண்ணீர் 2 கப்) ஊற்றி மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விட வேண்டும்.
* அவ்வளவு தான் கிரீன் பீஸ் புலாவ் ரெடி. இதற்குத் தொட்டுக் கொள்ள தக்காளி குருமா வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.