தீபாவளி ஸ்பெஷல்... தித்திப்பான காஜு கட்லி செய்வது எப்படி?





தீபாவளி ஸ்பெஷல்... தித்திப்பான காஜு கட்லி செய்வது எப்படி?

0
முந்திரி பருப்பை உண்பதற்கான சரியான வழி, இரவு முழுவதும் அதை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் சாப்பிடுவது தான். முந்திரி பருப்பில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 
தீபாவளி ஸ்பெஷல்... தித்திப்பான காஜு கட்லி செய்வது எப்படி?
மேலும் முந்திரி பருப்பை தொடர்ந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முந்திரி பருப்பில் நிறைய வைட்டமின்கள் மற்றும் சுவடு கூறுகள் உள்ளன. 

இது இரத்த நாளங்களை மென்மையாக்குகிறது, இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் இருதய நோய்களைத் தடுக்கிறது. 
புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் இப்படி நிறைய நிறைந்துள்ளன. பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்ற சத்துக்களும் இதில் கலந்துள்ளன. 

இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ள முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்துள்ளதால், இதயத்தின் தோழன் என்றே சொல்கிறார்கள்.

இந்த பருப்புகள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது. இதன்மூலம் இதய செயல்பாடு சிறப்பாக நிர்வகிக்கப் படுகிறது. 

முந்திரி பருப்பை சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய்க்கான அபாயமானது 37 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது. 

அதனால், இதயம் பலவீனமாக இருப்பவர்கள்கூட இந்த முந்திரியை குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ளலாம். காஜு கட்லியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. 

இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே காஜு கட்லி செய்து அசத்தலாம். முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. 

உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.

மேலும் தாவர வேதியங்கள் அல்லது தாவர ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பூக்கிகள் மற்றும் புரதங்களும் முந்திரி பருப்பில் அதிகமாக உள்ளது.
புற்றுநோயினை வராமல் தடுக்கிறது. தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தேவையான பொருட்கள் :

முந்திரி – 1 கப்

சர்க்கரை – 1 / 2 கப்

தண்ணீர் – 1 / 4 கப்

செய்முறை :

முந்திரி பருப்பை வெறும் கடாயில் போட்டு மிதமான சூட்டில் சிறிது நேரம் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

சர்க்கரை பாகில் கொஞ்சம் கொஞ்சமாக முந்திரி பவுடர் போட்டு கிளறவும். நன்றாக கிளறி கொண்டே இருந்தால் சேர்ந்து வரும்.
ஒரு தட்டில் சிறிது நெய் தடவி, அதில் இந்த மாவு கலவையை கொட்டி நன்றாக பிசையணும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து 

சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இட்டு துண்டுகள் போட வேண்டும். இப்போது தித்திப்பான காஜு கட்லி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)