பம்பாய் ரவா (Bombay rava) அல்லது ரவ்வா என்பது ஒரு கோதுமை தயாரிப்பு உணவு ஆகும். உமி நீக்கிய கோதுமையை அரைப்பதன் மூலம் ரவை தயாரிக்கப் படுகிறது.
இந்திய உணவு வகைகளான ரவா தோசை, ரவா இட்லி, உப்புமா, கிச்சடி போன்றவையும் ரவா லட்டு மற்றும் ரவா அல்வா அல்லது ரவா கேசரி போன்ற இனிப்புகளையும் தயாரிக்கிறார்கள்.
பம்பாய் ரவா இந்தியாவில் உப்மா செய்ய பயன்படுத்தப் படுகிறது. இது சில வகையான தோசைகளில், குறிப்பாக ரவா தோசையில் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப் படுகிறது.
மழை காலத்தில் பரவும் நோய்கள் என்ன?
கோதுமை மாவிலிருந்து சம்பா ரவை என்று அழைக்கப்படும் மற்றொரு வகையும் தயாரிக்கப் படுகிறது. இது கோதுமை மாவின் சுத்திகரிக்கப்பட்ட வடிவம் ஆகும்.
அல்வா என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும். அல்வா என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும்.
அரேபிய மொழியில் அல்வா என்பதற்கு தேவ இனிப்பு என்று அா்த்தம்.இன்று அல்வாவை ரவையிலிருந்து எப்படி தயார் செய்வது என்று இந்த பதிவில் கண்போம்.
என்னென்ன தேவை?
கோதுமை ரவை / பாம்பே ரவை / சம்பா ரவை ஏதேனும் ஒன்று – 1 கப்,
சர்க்கரை – 2 முதல் 2 1/2 கப்,
நெய் – 1 கப்,
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை,
தண்ணீர் – 5-6 கப் அல்லது தேவைக்கு,
அலங்கரிக்க முந்திரி, உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா (விருப்பத்திற்கு).
எப்படிச் செய்வது?
சிறிது நெய்யில் முந்திரி, உலர் திராட்சை, பாதாம்/ பிஸ்தா ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் மீண்டும் சிறிது நெய் சேர்த்து ரவையை நல்ல சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.
பின் இறக்கி வைக்கவும். வேறு ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் சேர்த்து ரவையை கொட்டி கை விடாமல் நன்றாக கிளறி வேக விடவும். இது நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
அவ்வப்போது மீதி இருக்கின்ற நெய்யையும் சேர்க்கவும். இந்தக் கலவை நல்ல அல்வா பதம் வரும் போதுவறுத்த முந்திரி, நட்ஸை பாதி பாகத் தை சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
இது நல்ல அல்வா பதம் வந்ததும் தேவைப்பட்டால் நெய், மீதி உள்ள நட்ஸ் சேர்த்து தூவி கிளறி இறக்கவும். சப்புக் கொட்ட வைக்கும் அல்வா தயார்.