டேஸ்டியான மில்க் அல்வா செய்வது எப்படி?





டேஸ்டியான மில்க் அல்வா செய்வது எப்படி?

பலரும் பாலை விரும்பி குடித்தாலும் அதை எந்த நேரத்தில் குடித்தால் சிறந்தது என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் பலரும் தெரிந்தோ தெரியாமலோ இரவில் பால் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். 
டேஸ்டியான மில்க் அல்வா செய்வது எப்படி?
உண்மையில் பாலை குடிக்க சிறந்த நேரமும் மாலை தான் அதிலும் குறிப்பாக உறங்க செல்வதற்கு முன் பால் குடிப்பது சிறந்த நேரமாக கருதப்படுகிறது. 

தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகும் பட்சத்தில் ஒருவர் தனது தினசரி டயட்டில் பால் சேர்த்து கொள்வது அவசியமானது. 

ருசியான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி?

பால் நுகர்வுக்கான சிறந்த நேரத்தில் அதனை பருகுவதன் மூலம் பாலில் இருக்கும் ஊட்டச்சத்து நன்மைகளை அதிகம் பெற முடியும். 

புரதம், கால்சியம், வைட்டமின் பி (குறிப்பாக ரிபோ ஃபிளேவின்), வைட்டமின் டி என எல்லாச் சத்துக்களும் பாலில் உள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் மட்டும் கொஞ்சம் குறைவு. 

பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை எல்லோருக்கும் பால் அவசியம். பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும். 

கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது. நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது.

தேவையான பொருட்கள் :

பால் – 4 கப்,

சர்க்கரை – 2 கப்,

நெய் – 1 கப்,

ரவை – அரை கப்,

சீவிய பாதாம் – தேவையான அளவு,

மஞ்சள் கலர் – ஒரு சிட்டிகை.

செய்முறை :

சிறிய கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, சீவிய பாதாமை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, ரவை அரை கப் நெய், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து, கொள்ளவும்.

இதை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறுங்கள். அடிக்கடி நெய் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்தக் கலவை சற்று சேர்ந்து வரும் போது, நெய் பிரியும். 

அப்போது தீயைக் குறைத்து, கலவை நன்கு சுருண்டு வரும் வரை விடாமல் கிளறி… கடைசியில், வறுத்து வைத்திருக்கும் பாதாமை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இதைத் தட்டில் பரப்பி, வில்லை களாகவும் போடலாம். ஸ்பூனில் எடுத்தும் பரிமாறலாம். சூப்பரான மில்க் அல்வா ரெடி.

குறிப்பு: 

ஒரு கப் அளவு என்பது 200 மிலி அல்லது 200 கிராம் அளவைக் குறிக்கும்.
Tags: