அருமையான அல்லம் பச்சடி செய்வது எப்படி?





அருமையான அல்லம் பச்சடி செய்வது எப்படி?

0
சர்க்கரைக்கு ஒரு நல்ல மாற்றாக வெல்லம் கருதப்படுகிறது. இது ஆரோக்கியமானதும் கூட. சுத்திகரிப்பு முறையில் வெல்லம் தயாரிக்கப் படுவதால், சர்க்கரையை விட இதில் சத்துக்கள் அதிகமாக இருக்கும். 
அருமையான அல்லம் பச்சடி செய்வது எப்படி?
இயற்கையாகவே இது இனிப்புத் தன்மை கொண்டதோடு பல வகையான ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. கேரமல் சுவை போல் இருக்கும் வெல்லம், பல வகையான உணவுகளில் இனிப்புத் தன்மையை அதிகரிக்க பயன்படுகிறது. 

பாரம்பரிய இந்திய உணவு வகைகள் முதல் பானங்கள் வரை வெல்லத்தின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. வெல்லத்தை வெறும் உணவு பண்டமாக மட்டும் நாம் கருதிவிட முடியாது. 
நமது உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த கூடிய பல நன்மைகள் இதிலுள்ளன. வெல்லத்தில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் மேக்னீசியம் அதிகமாக உள்ளன. 

ஒரு நபர் ஆரோக்கியமாக இருப்பதற்கு இவை அனைத்தும் அவசியம் தேவை. தினசரி வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் பல உடல்நல பிரச்சனைகள் தீரும் என்பது பலருக்கும் தெரிந்திராத விஷயம். 

செரிமானப் பிரச்சனைக் காரணமாக பலருக்கும் அடிக்கடி வாய்வுத் தொல்லை, அஜீரனம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் ஏற்படும். இது பல சமயங்களில் வயிற்று வலியை உண்டாக்கும். 

இதை தீர்க்க என்ன வழி? தினசரி உங்கள் உணவில் கொஞ்சம் வெல்லாம் சேர்த்தால், இப்பிரச்சனை எல்லாம் காணாமல் போய்விடும்.உங்களுக்கு தொண்டை வலி அதிகமாக இருக்கிறதா? 
சாப்பிடும் போது தொண்டை வலிக்கிறதா? இதிலிருந்து நிவாரணம் கிடைக்க வெல்லத்தை சாப்பிடுங்கள். கொஞ்சமாக துளசி இலையை எடுத்து, அதில் சாறெடுத்து, அந்த சாற்றை வெல்லத்தோடு நன்றாக கிளறுங்கள். 

இந்த கலவையை தினசரி மூன்று வேலை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால், தொண்டை வலி சீராகும்.
தேவையானவை:

நறுக்கிய இஞ்சி – அரை கப்,

காய்ந்த மிளகாய் – 2,

புளி, வெல்லம் – கொட்டைப்பாக்கு அளவு,

நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

வறுத்துப் பொடிக்க:

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,

கடுகு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வறுத்துப் பொடிக்க கொடுத்தவற்றை வறுத்துப் பொடிக்கவும். இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை புளியுடன் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்ததையும், பொடித்ததையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி எடுத்தால்…  அல்லம் பச்சடி தயார்.
குறிப்பு:

இதனைச் சாப்பிட்டால்… நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு ஆகியவை குணமாகும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)