புரதச்சத்து என்று வரும் போது, சைவ மற்றும் அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பும் உணவுகள் உள்ளன. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பன்னீர், அசைவ உணவுப் பிரியர்களுக்கு சிக்கன்.
ஆனால், இந்த இரண்டு உணவுகளில் அது ஆரோக்கியமானது? பன்னீரில் அதிகளவு ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், முடக்குவாதத்தை தடுக்க இது பெரிதும் உதவுகிறது.
பன்னீர் சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள ஹீமோ குளோபின் அதிகரிக்கிறது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆஸ்துமா, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஜலதோஷம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
உங்களுக்கு புரதம் அதிகம் வேண்டுமென்றால், சிக்கனை சாப்பிடுவது நல்லது. அதிகமான புரதத்தை எடுத்துக் கொள்வதால் எலும்பின் அடர்த்தி குறைவதை தடுக்கிறது. சைவப் பிரியர்களுக்கு வேறு வழியில்லை.
புரதம் வேண்டுமென்றால், நீங்கள் பன்னீர் தான் சாபிட்டாக வேண்டும். 100 கிராம் சிக்கனில் 31 கிராம் புரதம் இருக்கிறது. அதுவே 100 கிராம் பன்னீரில் 20 கிராம் புரதம் இருக்கிறது.
தேவையானவை:
துருவிய பனீர் - ஒரு கப்,
மைதா மாவு – ஒரு கப்,
சேமியா – கால் கப்,
ஓமம் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,
வறுத்த எள் - 2 டேபிள் ஸ்பூன்,
பொட்டுக் கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்,
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லி – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
மைதா மாவு, உப்பு, சேமியா வுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, ஓமம் தாளித்து கொள்ளவும்.
துருவிய பனீர், வறுத்த எள், பொட்டுக் கடலை மாவு, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி, கொத்த மல்லி, உப்பு இவற்றுடன் தாளித்த ஓமம், பெருங்காயத் தூள் சேர்த்துப் பிசையவும்.
மூலநோய் வெளிக்காட்டும் அறிகுறிகள் !
மைதா மாவு கலவையை சிறிய கிண்ணம் போல் செய்து, அதனுள் பனீர் கலவையை வைத்து மூடி வட்ட வடிவமாக தட்டவும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி, வட்ட வடிவமாக தட்டி வைத்த வற்றை இரண்டு இரண்டாக போட்டு பொரித்தெடுத்தால்… சுவையான கச்சோரி ரெடி.