உங்கள் வீட்டில் உள்ளோர் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் உங்களுக்கு நல்ல சுவையில் பாஸ்தா செய்யத் தெரியாதா? பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம்.
அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் மசாலா பாஸ்தாவை செய்யலாம்.
பாஸ்தாவை இன்னும் சத்தானதாக மாற்ற, அவற்றுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். பாஸ்தாவை காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் சாப்பிலாம்.
தேவையானவை :
பாஸ்தா - கால் கிலோ
பூண்டு - 5 பல்
சீஸ் - சிறிது
வெங்காயம் - 2
பேபி கார்ன் - ஒரு கப்
மைதா மாவு - ஒரு மேசைக் கரண்டி
சிவப்பு, பச்சை, மஞ்சள் குடை மிளகாய் - தலா ஒரு கப்
வெண்ணெய் - ஒரு மேசைக் கரண்டி
பால் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
ஆரிகேனோ, பேஸில் - சிறிது
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
செய்முறை :
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாஸ்தாவை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த உடன் குளிர்ந்த நீரில் அலசவும். அப்பொழுது தான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
ரொம்பவும் வதக்க வேண்டாம். சுவைக்காக சிறிது வெண்ணெய் சேர்க்கலாம். பிறகு சிவப்பு, பச்சை, மஞ்சள் குடை மிளகாய், பேபி கார்ன் சேர்த்து சிறிது பிரட்டி விடவும்.
நசுக்கிய பூண்டு, ஓரிகேனோ, பேஸில் மற்றும் உப்பு சேர்க்கவும். இன்னொரு பேனில் வெண்ணெயை சூடாக்கி மைதா சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
வாசம் வரும் பொழுது மைதா மாவுடன் பால் சேர்க்கவும். கட்டி இல்லாமல் வரும்படி கிளறவும். இதை வதக்கிய காய்களுடன் சேர்க்கவும். சிறிது சீஸ் சேர்த்து 2 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும்.
இத்துடன் வேக வைத்த பாஸ்தா சேர்த்து கிளறி விடவும்.10 நிமிடம் மூடி போட்டு சிறிய தீயில் வைக்கவும். இதன் ஃப்ளேவர் முழுதாக பாஸ்தாவில் பரவ செய்யும்.சுவையான பாஸ்தா தயார்.
இதில் பேபி கார்ன்க்கு பதிலாக ஸ்வீட் கார்ன் சேர்க்கலாம். காய்களை ரொம்ப வதக்காமல் செய்தால் சுவை கூடும்.பரிமாறவும்