அசத்தலான பைனாப்பிள் தினை கேசரி செய்வது எப்படி? #Kesari





அசத்தலான பைனாப்பிள் தினை கேசரி செய்வது எப்படி? #Kesari

0
அன்னாசிப் பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் அதிக அளவு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளன. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப் பழத்தை சாப்பிடுவது நல்லது. 
அசத்தலான பைனாப்பிள் தினை கேசரி செய்வது எப்படி?
தினை கொண்டு செய்யபட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். 

அன்னாசிப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சுவாசக் குழாய் அழற்சி, சைனஸ், சளி மற்றும் இருமலைக் குறைக்கவும் அன்னாசிப்பழம் உதவுகிறது.

தினை ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தி அதிகம் ருப்பதால், அதை சாப்பிடுபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும்.

சரி இனி பைனாப்பிள், தினை கொண்டு அசத்தலான பைனாப்பிள், தினை கேசரி செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம். 
என்னென்ன தேவை?

பைனாப்பிள் துண்டுகள் – 3/4 கப்,

தினை – 1/2 கப், குங்குமப்பூ (பாலில் ஊற வைத்தது) – ஒரு சிட்டிகை,

நெய் – 4 டேபிள் ஸ்பூன்,

முந்திரித் துண்டுகள் – 1/4 கப்,

திராட்சை – 10,

பனை வெல்லம் அல்லது பனைகற்கண்டு – 3/4 கப்,

வறுத்த ரவை – 1/2 கப்.
எப்படிச் செய்வது?
அசத்தலான பைனாப்பிள் தினை கேசரி செய்வது எப்படி?
1 டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் தினையை லேசாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.

ஆறியவுடன் வறுத்த தினையை மிக்ஸியில் ரவை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் 11/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

அதில் பைனாப்பிள் துண்டுகளைப் போடவும். மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வறுத்த தினை ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கட்டி இல்லாமல் கிளறவும். 
மிதமான தீயில் சுத்தப் படுத்திய பனை கற்கண்டு அல்லது பனை வெல்லத்தை சேர்க்கவும்.
இச்சமயத்தில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கேசரி சுருண்டு வரும் போது வறுத்த முந்திரி, திராட்சை, சிறிது பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து இறக்கி சூடாக கலந்து பரிமாறவும். 

பொடித்த பைனாப்பிள் கொண்டு அலங்கரிக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)