அருமையான ஸ்வீட் கார்ன் பாஸ்தா செய்வது எப்படி? #Pasta





அருமையான ஸ்வீட் கார்ன் பாஸ்தா செய்வது எப்படி? #Pasta

0
ஸ்வீட் கார்ன் ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாக விளங்குகிறது. இனிப்பு சோளத்தில் கொழுப்புகள், சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. 
அருமையான ஸ்வீட் கார்ன் பாஸ்தா செய்வது எப்படி?
அதே நேரத்தில், வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஸ்வீட் கார்னில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. 
வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளிலும் ஸ்வீட் கார்ன் மிகவும் நன்மை பயக்கும். ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி புரதம், லிப்பிட், கார்போஹைட்ரேட், 

வளர்சிதை மாற்றம் மற்றும் பைட்டோ கெமிக்கல்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது. 

ஸ்வீட் கார்னில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு. எனவே இது நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஸ்வீட் கார்னில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. 

இது பார்வையை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கண்களில் உள்ள கரோட்டினாய்டுகள் மாகுலர் சிதைவையும் குறைக்கின்றன.
தேவையானவை :

பாஸ்தா - ஒரு பாக்கெட்

குடை மிளகாய் - அரை கப்

தக்காளி - ஒன்று

உப்பு - தேவையான அளவு

டொமேட்டோ சாஸ் - கால் கப்
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - 2

சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி

ஸ்வீட் கார்ன் - ஒரு கப்

எண்ணெய் - 2 தேக்கரண்டி
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
செய்முறை
ஸ்வீட் கார்ன் பாஸ்தா
முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். குடை மிளகாயைப் பொடியாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். பின்பு வெங்காயம் வதங்கியதும், தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.அதனுடன் கார்ன், குடை மிளகாய், கரம் மசாலா மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
பிறகு டொமேட்டோ சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து பிரட்டவும்.பின்னர் அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி சிறிது நேரம் பிரட்டவும். பிறகு வேக வைத்துள்ள பாஸ்தாவைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். 

சுவையான கார்ன் பாஸ்தா தயார். பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)