சூப்பரான தவா புலாவ் செய்வது எப்படி?





சூப்பரான தவா புலாவ் செய்வது எப்படி?

0
இஞ்சி பூண்டு பேஸ்ட் பிரியாணி தொடங்கி, புலாவ், சிக்கன், மட்டன், தொடங்கி எல்லா வகை அசைவ உணவுகளிலும் கட்டாயம் சேர்க்கப்படும் ஒன்று. 
தவா புலாவ்
அந்த உணவுகளின் வாசனையைக் கூட்டுவது மட்டுமின்றி அவற்றின் சுவையைக் கூட்டுவதிலும் இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டுக்கு முக்கிய இடமுண்டு. 

இஞ்சி மற்றும் பூண்டின் விலை எவ்வளவு அதிகமானாலும் பாக்கெட்டுகளில் விற்கும் ரெடிமேட் இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் விலை மட்டும் ஒரே மாதிரி இருக்கிறதே! இதற்குக் காரணம் என்னவென்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா? ஆம்.
கடைகளில் ரெடிமேடாக வாங்கும் பேஸ்ட்டில் சேர்க்கப்படும் இஞ்சி மற்றும் பூண்டின் அளவு மிக மிகக் குறைவாக இருக்கும். ஆனால் பிற ரசாயனங்களும் பதப்படுத்திகளும் அதிகமாக இருக்கும்.

நீங்கள் வாங்கும் பாக்கெட்டின் பின்பக்கம் திருப்பி பாருங்கள் அதில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப் படுகின்றன என்பதையும் பாருங்கள். 

அதில் இஞ்சி மற்றும் பூண்டை தவிர, சோடியம் ஆக்சினேட், குவார்கம் ஆகியவை சேர்க்கப் படுகின்றன. கிலோ கணக்கில் இஞ்சி இருந்தாலும் பத்து நிமிடத்தில் தோல் நீக்கி விடலாம். 

இஞ்சியை நன்கு கழுவி, ஈரத்தை துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூனை எடுத்து அதை வைத்து நன்கு சுரண்டி எடுத்தாலே தோல் முழுவதும் நீங்கி விடும்.
தேவையானவை :

சாதம் - ஒரு கப்

குடை மிளகாய் - ஒன்று

காரட் - பாதி

கொத்தமல்லித் தழை - கைப்பிடி

சீரகம் - அரை தேக்கரண்டி

சில்லி கார்லிக் பேஸ்ட் - ஒரு மேசைக் கரண்டி

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று
எண்ணெய் - தாளிக்க

பாவ் பாஜி மசாலா - 2 மேசைக் கரண்டி

உப்பு - தேவையான அளவு

பீன்ஸ் - 3

பச்சை பட்டாணி - கால் கப்

பச்சை மிளகாய் - 3
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவா?
சில்லி கார்லிக் பேஸ்ட் தயாரிக்க : 

வர மிளகாய் - 4

பூண்டு - 5 பல்

செய்முறை :

முதலில் வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கவும். காரட், பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை சிறிதாக நறுக்கவும். சில்லி கார்லிக் விழுது தயாரிக்க வர மிளகாயை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து, அதனுடன் பூண்டு சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். 

ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி, காரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய குடை மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கிளறவும்.
வதக்கிய வற்றுடன் உப்பு, பாவ் பாஜி மசாலா மற்றும், சில்லி கார்லிக் பேஸ்ட் சேர்த்து பிரட்டவும். கடைசியாக வேக வைத்த சாதத்தை சேர்த்து பிரட்டி பொடிதாக நறுக்கிய கொத்த மல்லித் தழை தூவி இறக்கவும். 
ஏன் முதுகு கூன் விழுகிறது? அதை எப்படி தடுப்பது?
சுவையான தவா புலாவ் ரெடி.பாக்ஸ் இல் வைக்கவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)