தக்காளியில் லைகோபீன் போன்ற அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இருதய நோய்களின் அபாயத்தைக் குறைத்து அதிகப்படியான இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.
புரதம் 0.9 கிராம், கார்போ ஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !
தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். மற்றும் இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும்.
தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.உணவு அமிலங்கள் சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் டார்டாரிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வருகின்றன.
இவை அனைத்தும் இயற்கையாகவே உள்ளன. மாலிக் அமிலம் என்பது ஆப்பிளில் காணப்படும் அமிலமாகும். ஆக்ஸாலிக் அமிலம் என்பது தக்காளியில் காணப்படும் ஒரு வகை அமிலம்.
தேவையானவை
பாஸ்தா - 3 கப்
வெங்காயம் - 1
கேரட் - 1
தக்காளி - 2 (அரைத்தது)
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 2-3 பற்கள்
இஞ்சி - 1 இன்ச்
பச்சை மிளகாய் - 1-2
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்த மல்லி - சிறிது
நரேந்திர மோடி அக்குபிரஷர் ரோலர் கருவி வைத்திருந்தது ஏன்?
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் பாஸ்தாவை சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து விட்டு,
பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் கேரட்டை சேர்த்து நன்கு வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் சாம்பார் பொடி, தக்காளி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து பிரட்டி, கொத்த மல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தக்காளி பாஸ்தா தயார்.