அருமையான சுரைக்காய் இனிப்பு போளி செய்வது எப்படி?





அருமையான சுரைக்காய் இனிப்பு போளி செய்வது எப்படி?

0
சுரைக்காய் என்பது அதிக நீர்ச்சத்து கொண்ட, கோடை காலத்தில் விளையக் கூடிய காய் வகை ஆகும். இந்தியாவில் அதிகப்படியாக விளையும் இந்த காயானது, உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கக் கூடியதாகும். 
சுரைக்காய் இனிப்பு போளி செய்வது எப்படி?
குறிப்பாக, தமிழர்களின் உணவுக் கலாச்சாரத்தில் சுரைக்காய் கண்டிப்பாக இடம் பிடித்து விடுகிறது. சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. 

இதனால், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கிறது. 
வைட்டமின் சத்துக்கள், நீர்ச்சத்து, நார்ச்சத்து போன்றவை சுரைக்காயில் உள்ளன. சுட்டெரிக்கும் மே மாத வெயில் தொடங்க இருக்கிறது. இந்த சமயத்தில் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். 

வெப்பக் காற்று வீசுவதால் எண்ணற்ற தொந்தரவுகள் ஏற்படும். இத்தகைய சூழலில், நம் உடலுக்கு மிக அதிகப்படியான நீர்ச்சத்து வழங்குவது அவசியமாகும். 

வெறுமனே தண்ணீர் அருந்துவது மட்டும் பலன் அளிக்காது. ஆகவே, நீர்ச்சத்து நிரம்பிய காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சுரைக்காய் நல்ல தேர்வாக அமையும்.

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்

நெய் – தேவையான அளவு

தேங்காய் – 1 கப்

சர்க்கரை – 3/4 கப்

பால் – 1/2 கப்

ஏலக்காய் தூள் – 1/4 டேஸ்பூன்

கேசரி பவுடர் – 1 சிட்டிகை

செய்முறை:
அருமையான சுரைக்காய் இனிப்பு போளி செய்வது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்று சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்கி பின் பால் சேர்த்து நன்கு மென்மையாக வேகும் வரை கொதிக்க வேண்டும்.

பிறகு அதில் கேசரி பவுடர் சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். கலவையானது கெட்டியாக வர ஆரம்பிக்கும் போது அதில் சிறிது நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள் !
இறுதியில் மைதா மாவை சிறு உருண்டை களாக பிரித்து சப்பாத்தி போன்று தேய்த்து நடுவே ஒரு ஸ்பூன் சுரைக்காய் கலவையை வைத்து நான்கு புறமும் மடித்து மீண்டும் ஒரு முறை லேசாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் தேய்த்து வைத்துள்ள போளீயை போட்டு நெய் ஊற்றி முன்னும் பின்னும் நன்கு வேக்ச் வைத்து இறக்கினால் சுரைக்காய் போளி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)