ஆப்பிள் ஸ்டியூ கேக் செய்வது எப்படி?





ஆப்பிள் ஸ்டியூ கேக் செய்வது எப்படி?

0
ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு. 
ஆப்பிள் ஸ்டியூ கேக் செய்வது எப்படி?
இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது.  

ஆப்பிளில் இரும்புச்சத்து பாஸ்பரஸ் உப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் பாலுடன் ஒரு ஆப்பிளும் எடுத்துக் கொண்டால் ரத்தசோகை நீக்கி உடலை பாதுகாக்கும். உடலைப் பாதுகாக்கும் பழங்களில் ஆப்பிள் முதலிடம் வகிக்கிறது. 
 
தினசரி ஒரு ஆப்பிள் உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என சமிபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதற்கு காரணம் ஆப்பிளின் தோலில் உள்ள பாலிஃபீனால்கள் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்கு செல்கிறது. 

உங்கள் குழந்தைகள் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? ஒரு சுவையான கேக் ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள். 
அதுவும் வீட்டில் ஆப்பிள், மைதா மாவும் இருந்தால் போதும், ஈஸியாக மில்க் கேக் செய்யலாம். இந்த ஆப்பிள் ஸ்டியூ கேக் செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில எளிய பொருட்களே போதுமானது. 
அந்த பொருட்களைக் கொண்டு அற்புதமான சுவையில் ஆப்பிள் ஸ்டியூ கேக்கை செய்யலாம். முக்கியமாக இந்த ஆப்பிள் ஸ்டியூ கேக்கை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்தால், உங்கள் குழந்தைகள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். 

தேவையானவை :

ஆப்பிள் - 1,

வெண்ணெய் - 50 கிராம்,

சர்க்கரை - 100 கிராம்,

மைதா - 125 கிராம்,

பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்,

வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்,
முட்டை - 1.

செய்முறை :
ஆப்பிள் ஸ்டியூ கேக் செய்முறை
ஆப்பிளை முழுதாக வேக வைத்து, தோலுடன் சேர்த்து அரைத்து வைக்கவும். அந்த விழுது 100 கிராம் இருக்க வேண்டும்.

மைதாவுடன், பேக்கிங் பவுடர் சேர்த்து சலிக்கவும். வெண்ணெயையும் சர்க்கரை யையும் அடித்துக் கலக்கவும். அந்தக் கலவையில் ஆப்பிள் விழுதை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். 
முட்டையைச் சேர்த்து அடிக்கவும். மைதா கலவை, எசென்ஸ் சேர்த்துக் கலந்து, 160 டிகிரியில் பேக் செய்யவும். மைக்ரோவே வில் வைப்பதானால் 3 நிமிடங்களுக்கு செட் செய்து, தேவைப் பட்டால் 

மேலும் 2 நிமிடங்கள் வைக்கலாம். ஆறியதும், குளிர வைத்துப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)