டேஸ்டியான பேல் பொரி சாட் செய்வது எப்படி?





டேஸ்டியான பேல் பொரி சாட் செய்வது எப்படி?

0
அரிசி பொரி மிக எளிமையாக குறைந்த விலையில் கிடைக்க கூடிய ஒரு உணவு பொருளாகும். இது அரிசியில் இருந்து தயார் செய்யப்படுகிறது. 
டேஸ்டியான பேல் பொரி சாட் செய்வது எப்படி?
பொதுவாக பொரி பண்டிகை காலங்களில் சாமிக்கு படையல் வைத்து வழிபட கூடியது. இதனை மீன்களுக்கு உணவாகவும் சிலர் கொடுப்பார்கள். இத்தகைய பொரியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது உங்களது தெரியுமா? 

அதாவது 100 கிராம் பொரியில் 402 கிராம் கலோரிகள், 0.5 கிராம் கொழுப்பு, 90 கிராம் கார்போ ஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து 1.7 கிராம், 6 கிராம் புரதம் மற்றும் 6 மிகி கால்சியம், மெக்னீசியம் 25 மிகி, இரும்பு 31.7 மிகி, 0.1 மிகி வைட்டமின் பி6, நியாசின் 4.1 மி.கி உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. 

நார்ச்சத்து நிறைந்த பொரியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கலை போக்க முடியும். 

பொரியை தினசரி எடுத்துக் கொள்வதால், மலத்தில் உள்ள சளி மற்றும் அதிகப் படியான கொழுப்பின் அளவு குறைந்து, குடல் ஒட்டிக் கொள்வதைத் தடுக்கும். இதனால் மலம் கழிப்பது எளிதாகும். 
மலச்சிக்கல் ஏற்படாது. பொரி குறைந்த கலோரிகள் மட்டுமே கொண்டுள்ளது. இதனால் டயட் இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் தாராளமாக பொரி சாப்பிடலாம்.
என்னென்ன தேவை?

பொரி – 1 பாக்கெட்,

வெங்காயம் – 2,

கேரட் துருவல் – 1/4 கப்,

வேக வைத்த உருளைக் கிழங்கு – 1,

தக்காளி – 1,

ஓமப்பொடி – 1/2 கப்,

சாட் மசாலாத் தூள் – 1 டீஸ்பூன்,

வேக வைத்த வேர்க்கடலை – 1/4 கப்,

மிக்ஸர் – 1/4 கப், இனிப்பு சட்னி,

காரச் சட்னி – தேவைக்கு.

இனிப்பு சட்னி…
பேரீச்சம் பழம் – 5,

புளி – நெல்லிக்காய் அளவு,

வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்.

காரச் சட்னி…

புதினா – 1 கட்டு,

தேவையானால் கொத்த மல்லித்தழை – சிறிது,

பச்சை மிளகாய் – 2,

எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?
டேஸ்டியான பேல் பொரி சாட் செய்வது எப்படி?
இனிப்பு சட்னிக்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கலர் சிறிது மாறியதும் இறக்கி ஆற விடவும். 

காரச் சட்னிக்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பரிமாறும் முறை…

ஒரு பெரிய பாத்திரத்தில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும், இருவகை சட்னியையும் கலந்து கிண்ணத்தில் போட்டு பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)