காலையில் அவசரம் அவசரமாகச் சமைப்பது, அதைவிட அவசரமாகச் சாப்பிடுவது என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு வாழ்க்கை பரபரத்துக் கிடக்கிறது.
அமர்ந்து சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எது கிடைக்கிறதோ அதுதான் உணவு. அப்படிப் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப்பொருள், பிரெட்.
சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் மட்டுமே எளிதான உணவு.
ஓட்ஸ் ஆரோக்கியமான தானியமாகக் கருதப்படுகிறது, அதிலிருந்து பிரெட் தயாரிக்கப்பட்டால், பல ஊட்டச்சத்துக்களை நாம் பெறலாம்.
ஓட்ஸ், முழு கோதுமை மாவு, ஈஸ்ட், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த பிரெட் தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து, மக்னீசியம், வைட்டமின் பி-1, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.
இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது, இதன் காரணமாக எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முழுதானிய பிரெட் பசியை குறைக்க ஒரு சிறந்த வழி.
இதை சாப்பிடுவதால் இதய நோய் அபாயம் குறைகிறது. இந்த வகை பிரெட்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த வகை பிரெட் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் உதவியுடன் தயாரிக்கப் படுகிறது. இந்த பிரெட்டை சாப்பிடுவதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி நாள்பட்ட நோய் அபாயமும் தவிர்க்கப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
தூங்கி எழும் போது பேக் பெயின் இருக்கா? – காரணம் இது தான் !
தேவையானவை:
கடலை மாவு - 150 கிராம்,
பிரெட் துண்டுகள் - 10,
உருளைக் கிழங்கு - 4,
வெங்காயம் - 2,
இஞ்சித் துருவல் - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 1,
கடுகு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு தாளித்து... இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி,
பிரெட் தூள், உருளைக் கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக் கலவையை சிறு உருண்டை களாக உருட்டி, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.