காலையில் அவசரம் அவசரமாகச் சமைப்பது, அதைவிட அவசரமாகச் சாப்பிடுவது என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு வாழ்க்கை பரபரத்துக் கிடக்கிறது.
அமர்ந்து சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எது கிடைக்கிறதோ அதுதான் உணவு. அப்படிப் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப்பொருள், பிரெட்.
சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் மட்டுமே எளிதான உணவு.
கார்போ ஹைட்ரேட், உடலின் உள்ளே செல்லும் போது, அது சர்க்கரைச் சத்தாக மாறும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போவதுடன் மலச்சிக்கல் ஏற்படலாம். உப்புச் சத்தும் அதிகரிக்கும்.
தொடர்ந்து பிரெட் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். பிரெட்டை, எந்த வடிவத்தில் உட்கொள்கிறோம் என்பது கவனிக்கத்தக்கது.
பெரும்பாலும் பட்டர் சேர்த்தோ, ஜாம் தடவியோ, ரோஸ்ட்டாகவோ, சாண்ட்விச்சாகவோ, பிரெட் ஆம்லெட்டாகவோ உட்கொள்ளப் படுகிறது. இவற்றில் சேர்க்கப்படும் எண்ணெய், காய்கறிகள் மற்றும் வறுக்கப்படும் நேரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 10,
மைதா மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம்,
தேங்காய் துருவல் - 100 கிராம்,
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
நெய் - 2 டீஸ்பூன்,
கேசரி பவுடர் - சிறிதளவு.
செய்முறை:
பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும்.
மைதா மாவில் கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு அப்பளங்களாக இடவும். இதனுள் பூரண உருண்டைகளை வைத்து மூடி, ஒரு வாழை இலை (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவி போளிகளாக தட்டவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும். பருப்பு சேர்க்காத இந்த பிரெட் போளி, ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
பண்டிகை நாட்களில் முந்தைய நாளே தயாரித்து வைத்து விடலாம்.