சுவையான வெள்ளரி ரோல் செய்வது எப்படி?





சுவையான வெள்ளரி ரோல் செய்வது எப்படி?

0
சுமார் 90% தண்ணீரை கொண்டிருப்பதால் வெள்ளரிக்காய் ஒரு சிறந்த ஹைட்ரேட் மற்றும் கூலிங்கான உணவாக இருக்கின்றன. சாலட்ஸ், சாண்ட்விச்சஸ் என பல வெரைட்டிகளில் கலந்து சாப்பிட வெள்ளரிகள் நமக்கு சிறந்த தேர்வாக இருக்கின்றன. 
சுவையான வெள்ளரி ரோல் செய்வது எப்படி?
ஒன்றுமே இல்லாவிட்டால் கூட வெள்ளரிக்காயை வெட்டி அதன் மீது உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி சாப்பிட்டாலே மிகவும் சுவையாக இருக்கும். வெள்ளரிகள் பல்வேறு ஊட்டச் சத்துக்களால் நிரம்பி உள்ளன. 

மார்பகம், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் லிக்னான்ஸ் எனப்படும் பாலிபினால்கள் வெள்ளரிகளில் உள்ளன. 
கலோரிகள் குறைவாகவும், ஃபைபர் சத்து அதிகமாகவும் இருப்பதால் எடை இழப்பு மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு வெள்ளரி பெரிதும் உதவுகிறது.

சில நேரங்களில் நாம் ஆசையாக வெள்ளரியை கடித்து சாப்பிடும் போது சுவையற்றதாகவும், மிகவும் கசப்பதை உணர்ந்திருப்போம். அப்படி நிகழும் நேரத்தில் வெள்ளரியை சாப்பிடும் ஆசையே சட்டென்று போய்விடும். 

சுவையான மற்றும் நீர்ச்சத்து மிக்க வெள்ளரி சில சமயம் ஏன் இப்படி கசக்கிறது என்று நாம் யோசித்திருக்கிறோமா!! இதற்கு காரணம் குக்குர்பிடசின் (cucurbitacin) எனப்படும் ஒரு தனிமம், இது ஒரு ஹை-லெவல் டாக்ஸிக் காம்பவுண்ட் ஆகும். 

வெள்ளரிகளில் உள்ள குக்குர்பிடசின்கள் மற்றும் டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டு போன்ற சேர்மங்கள் அவற்றை கசப்பாக்குவதுடன் அபாயகரமான அரிதான அலர்ஜிகளை ஏற்படுத்தும்.

தேவையானவை : 

வெள்ளரிக்காய் – ஒன்று

மிளகுத் தூள்,

உப்பு – தேவையான அளவு

செர்ரி -10

டூத்பிக் - 10.
முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம்ன்னு உங்களுக்கு தெரியுமா?
செய்முறை:
வெள்ளரி ரோல்

வெள்ளரிக்காயைக் கழுவி ஓரங்களை நீக்கி விட்டு, லேசாக தோல் சீவி விட்டு, நீளவாக்கில் சீவவும் (பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவுவது போல). அதன் மீது உப்பு, மிளகுத் தூளைத் தூவி பாய் போல சுருட்டவும். 

அதன் மேல் பகுதியில் செர்ரியை வைத்து டூத்பிக்கால் குத்திப் பரிமாறவும்.

குறிப்பு:

வெள்ளரிக் காயில் இரும்புச் சத்து, வைட்டமின்-பி உட்பட பல்வேறு சத்துகள் இருக்கின்றன. நாவறட்சியைப் போக்கும். மூளைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

வெள்ளரிகளில் சுமார் 90% நீர் இருப்பதால் அதிகம் சாப்பிடும் போது ரத்த நாளங்களில் ஓடும் ரத்தத்தின் நிகர அளவை அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் மற்றும் இதயத்திற்கு அழுத்தம் அதிகரிக்கிறது. 
ரயிலின் பின்பக்கத்தில் 'X'-ன்னு எழுதபட்டு இருக்கும் - அது ஏன் தெரியுமா?
இது எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைத்து ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தை அபாயத்தில் ஆழ்த்துகிறது.90% நீர் நிரம்பிய வெள்ளரி எப்படி நீரிழப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் யோசிக்கலாம். 

வெள்ளரிக்காய் இயற்கையாகவே டையூரிடிக் ஆகும், அதாவது சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்க கூடியது. டையூரிடிக் பண்புகளை கொண்ட குக்குர்பிடின் என்ற கலவை வெள்ளரியில் உள்ளது. 

டையூரிடி கலவையின் அளவு மிதமானது என்றாலும், சற்று அதிகமாக வெள்ளரி சாப்பிட்டால் கூட உடலில் சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கும். அதிக சிறுநீர் உற்பத்தி ஒருகட்டத்தில் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)