பாலில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக வளரும் குழந்தைகளுக்குப் பாலை மட்டுமே உணவாகக் கொடுக்கக் கூடாது.
பாலை அதிகமாகக் குடிக்கும் குழந்தைகள் மற்ற உணவுகளைச் சாப்பிட மறுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு மற்ற உணவுகளின் மூலம் கிடைக்கும் புரதம் மற்றும் இரும்புச்சத்து கிடைக்காமல் போகும்.
இதனால் அடிக்கடி சோர்வு, எதிர்ப்பு சக்தியின்மை, எதிலும் ஆர்வம் இன்றி இருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
எனவே, தினமும் குழந்தைகளுக்குக் காலை 100 மில்லி, மாலை 100 மில்லி என்ற அளவில் பால் கொடுத்தால் போதுமானது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சி அதிகரிக்க, உயரத்தை அதிகரிக்க எனக் கடைகளில் கிடைக்கும் புரதச்சத்து மாவுகளை வாங்கி பாலுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
பாக்கெட் பால்களில் உள்ள கொழுப்புச்சத்து காரணமாகக் குழந்தைகளுக்கு அசீரண கோளாறுகள் ஏற்படக் கூடும் என்பதால் கூடுமானவரை குழந்தைகளுக்கு பாக்கெட் பாலினை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
பாலில் தண்ணீர் கலப்பதன் மூலம் பாலில் உள்ள சத்துகள் குழந்தைகளை முழுமையாகச் சென்றடையாது என்பதால் குழந்தைகளுக்கு காய்ச்சும் பாலில் தண்ணீர் கலக்கக் கூடாது.
தேவையானவை:
பால் - 200 மில்லி லிட்டர்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 7
வெள்ளை ரவை - 100 கிராம்
நெய் - 30 மில்லி
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) -
2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு - 2
பிஸ்தா - 2
செர்ரி பழம் - 2
ஹை ஹீல்ஸை தவிர்க்கவும் !
செய்முறை:
வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும். பால் வற்றி ரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி,
உதடு மற்றும் வாய் பராமரிப்பு !
கேசரி பதத்துக்கு ரவை வந்த பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
குறிப்பு:
கேசரிக்கு நிறம் வேண்டு மென்றால், பாலுடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சேர்க்கலாம் அல்லது கேசரி மீது ஒரு சிட்டிகை குங்குமப் பூவைத் தூவியும் பரிமாறலாம்.