சுவையான பட்டாணி பாத் செய்வது எப்படி?





சுவையான பட்டாணி பாத் செய்வது எப்படி?

0

வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும். 

சுவையான பட்டாணி பாத் செய்வது எப்படி?
வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.

உடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும். நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக் கூடியது பச்சைப் பட்டாணி. 

எனவே, தினமும் மருந்து போல் ஒரு கைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். 

சரி இனி பச்சைப் பட்டாணி கொண்டு சுவையான பட்டாணி பாத் செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையானவை : .

அரிசி - 1/4 கிலோ,

துவரம் பருப்பு - 150 கிராம்,

கத்தரிக்காய் - 2,

உருளைக்கிழங்கு - 1,

கேரட் - 1,

பச்சை பட்டாணி - 1 கப் (1/4 கிலோ),

புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு,

பெரிய வெங்காயம் - 1,

தக்காளி - 2,

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,

உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்து பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 6,

தனியா - 2 தேக்கரண்டி,

பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி,

கசகசா - 1 தேக்கரண்டி,

மராட்டி மொக்கு - 1,

மிளகு - 1/2 தேக்கரண்டி,

தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி,

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி,

கறிவேப்பிலை - சிறிது,

கொத்தமல்லி தழை - சிறிது,

பெருங்காயம் - சிறிது,

நெய் - 3 ஸ்பூன்,

எண்ணெய் - 3 ஸ்பூன்.

செய்முறை : .

சுவையான பட்டாணி பாத் செய்வது எப்படி?

அரிசியையும் பருப்பையும் ஒன்றாக கலந்து கழுவி, ஒன்றுக்கு இரண்டரை மடங்கு தண்ணீர் வைத்து குக்கரில் 3 விசில் விட்டு குழைய வேக விட்டு எடுக்கவும்.

வெந்த சாதத்தை லேசாக மசிக்கவும். வறுக்கக் கொடுத்துள்ளவைகளை 1/2 ஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடித்து வைக்கவும்.

புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கு, கேரட்டை தோல் சீவி, துருவி வைக்கவும். புளித்தண்ணீரில் உப்பு, எல்லா காய்களையும், பட்டாணியையும் சேர்த்து வேக விடவும்.

வெந்ததும் பொடித்த பொடியை சேர்த்து ஒரு கொதி விடவும். மசித்த சாதத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். (சாதம் தளர இருக்க வேண்டும்)

வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, ஒரு கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாதத்தில் கொட்டி கிளறவும்.

கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)