பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலயும் சாப்பிடலாம்னு சொல்லுவாங்க...! அந்த அளவுக்கு மிளகுல விஷத்த முறிக்கக் கூடிய தன்மை இருக்கு.
டெய்லி பல் தேய்க்கும் போது மிளகோட உப்பு சேர்த்து தேய்ச்சிட்டு வந்தா பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் எல்லாம் நீங்கி பல் வெண்மையாகும்.
தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெது வெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி உணவை செரிக்க உதவும்.
மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.
வெற்றிலை சாறு 180 மிலியுடன் மிளகு 35 கிராம் சேர்த்து 1 நாள் முழுவதும் ஊற வைத்து பின் ஊறிய மிளகை உலர்த்தி பொடி செய்து பீங்கான் பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பொடியை இருவேளை 2 விரல் அளவு வெந்நீரில் எடுத்து வர பூரான் கடி விஷம் உடலில் நீங்கும்.
தேவையானவை
ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம்
மிளகு – ஒரு டீஸ்பூன்
பிரியாணி இலை – 2
சீரகம், மிளகுத் தூள் – தலா அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
வெங்காயம் – 2
நறுக்கிய கேரட் – கால் கப்
கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பிரியாணி இலை தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.