உங்கள் வீட்டில் உள்ளோர் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் உங்களுக்கு நல்ல சுவையில் பாஸ்தா செய்யத் தெரியாதா? பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம்.
பாஸ்தாவை காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் சாப்பிலாம்.பாஸ்தாவில் அதிகப்படியான கார்போ ஹைட்ரேட் உள்ளதால் இது நம் உடலின் செயல்பாட்டுக்கு எரிபொருளாக அமைகிறது.
சிலர் பாஸ்தாவை சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணமே அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் தான். பாஸ்தாவில் ப்ரோடீன், மினரல்ஸ், நார்சத்து உள்ளிட்ட பல நன்மைகளும் அடங்கியுள்ளது.
இவை அனைத்தும் பாஸ்தாவின் தரத்துக்கு ஏற்றவாறு மாறுபடும். ஆதாவது பாஸ்தா பல வடிவங்களில் விற்கப்படுகிறது. சங்கு, நூடுல்ஸ் உள்ளிட்ட பல டிசைன்களில் பாஸ்தா விற்கப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளில் பாஸ்தாவை கோதுமை பயன்படுத்தி தயாரிக்கின்றனர். சில இடங்களில் மைதா மாவை பயன்படுத்தி பாஸ்தா தயாரிக்கப்படுகிறது.
இவை இரண்டுக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளன. கோதுமை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாஸ்தாவில் அதிகளவு ஊட்டச்சத்து அடங்கியுள்ளது.
தேவையானவை
பாஸ்தா - ஒரு கப்
கேரட் – ஒன்று
துருவிய சீஸ் - ஒரு மேசைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
பச்சை பட்டாணி - கால் கப்
பீன்ஸ் - 5
வெங்காயம் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் - சிறிதளவு
புதினா - 3 இலைகள்
தக்காளி - ஒன்று
பூண்டு - 3 பல்
பிரிஞ்சி இலை - 2
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி?
செய்முறை :
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை கொதிக்க விடவும். பின் சிறிது உப்பு மற்றும் பாஸ்தாக்களை போட்டு வேக விடவும். பாஸ்தா வெந்த பின் மீதமுள்ள தண்ணீரை வடிக்கவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் வெண்ணெய் போட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.
பின் தக்காளி, தக்காளி சாஸ், புதினா, மிளகாய் தூள் போட்டு வதக்கவும். வதங்கியதும் வேக வைத்த காய்கறிகள், உப்பு, கரம் மசாலாத் தூள், அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
நீடித்த ஆயுளைத் தரும் கார்போ ஹைட்ரேட் !
கொதி வந்த பின் வேக வைத்த பாஸ்தாவை போட்டு கிளறி இறக்கவும். பின் துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.