முன்னோர்கள் ஒவ்வொரு காலங்களிலும் கிடைக்கும் ஆரோக்கியம் தரும் உணவு பொருள்களை மொத்தமாக சேகரிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.
அந்த வகையில் கோடையில் மட்டுமே பூக்ககூடிய வேப்பம் பூக்களை சேகரித்து வருடம் முழுக்க பயன்படுத்தி வந்தார்கள்.
வேப்பம் பூவை சேகரிக்கும் முறையும் பதப்படுத்தும் முறையும் குறித்து தெரிந்து கொள்வதோடு அவை எதற்கு எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம்.
வாயு கோளாறு, வயிறு உப்புசம், வயிறு மந்தம், வயிற்று வலி பிரச்சனைகள் இருப்பவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வேப்பம்பூ கஷாயம் சிறப்பாக பலன் தரும்.
ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து நான்கு வேப்பம் பூக்களை போட்டு கொதிக்கவிட்டு அரை டம்ளர் ஆகும் வரை சுண்ட வைத்து இறக்கி குடிக்கவும்.
தினமும் காலை மாலை என்று இரண்டு வேளையும் குடித்து வந்தால் வயிற்று கோளாறுகள் நீங்கும். சிறு பிள்ளைகளுக்கு இதை ஒரு வேளை மட்டும் கொடுக்க வலியோடு வயிறும் சுத்தம் ஆகும்.
பித்த வாந்தி பிரச்சனை இருப்பவர்களுக்கு இவை கை கண்ட மருந்து. பித்த வாந்தியால் அவதிப்படுபவர்கள் உணவு செரிமானமாகாமல் உணவு எதுகளிப்பு, புளியேப்ப பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
பெரியவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் தினமும் சாப்பிடுவதற்கு முன்பு அரை மணிநேரம் முன்னதாகவே வேப்பம் பூ மூன்றை வெறும் வாயில் இட்டு உடன் சிறிது பனைவெல்லம் சேர்த்து மென்று சாறை விழுங்க வேண்டும்.
ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் இரண்டு அல்லது மூன்று வேப்பம் பூக்கள் போதுமானது. மூன்று நாளிலேயே நல்ல பலன் கிடைக்கும்.
தேவையானவை:
வேப்பம்பூ – ஒரு கப்,
புளி – எலுமிச்சை அளவு,
கடுகு – அரை டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – ஒன்று,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
வெல்லம் – 100 கிராம்,
உப்பு – சிறிதளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து… புளிக் கரைசல், உப்பு சேர்த்து, வெல்லம் போட்டு கொதிக்க விடவும். சிறிது கொதித்த வுடன் வேப்பம் பூவை வறுத்துப் போட்டு இறக்கவும்.
குறிப்பு:
வேப்பம்பூ சீஸனில் வேப்பம் பூவை சேகரித்து வைத்தால்… பொடி, துவையல், ரசம் என்று பலவிதமாக பயன்படுத்தலாம். பித்தத்துக்கு மிகவும் நல்லது.