இந்திய உணவுகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது தயிர். ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தயிரில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளது.
எந்த உணவோடும் தயிரை சேர்த்து சாப்பிடலாம் என்பதுதான் இதன் விசேஷம். தயிரில் அதிகமான புரோபயாடிக் உள்ளது. இது நமது குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தியாக துணை புரிகிறது.
மேலும் நமது செரிமானத்திற்கும் மெட்டபாலிஸத்திற்கும் தயிர் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்றவை ஏற்படாது.
தயிரில் உள்ள அண்டி ஆக்ஸிடெண்ட் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பளபளப்பான சருமத்தை தருகிறது. மேலும் தயிர் சாப்பிடுவதால் நம் உடலில் கொலஜன் உற்பத்தி அதிகமாகி இளமை தோற்றத்தை தருகிறது.
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் உடலுக்கு தேவையான பல மினரல்கள் தயிரில் நிறைந்துள்ளது. இவை நம் பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலுவை தருகின்றன.
சரி இனி தயிர், சேமியா பயன்படுத்தி ருசியான தயிர் சேமியா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை :
சேமியா - அரை கப்,
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்,
பால் -அரை கப், உப்பு -
தேவைக்கேற்ப,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
பச்சை மிளகாய் - 1,
மல்லித்தழை & 1 டீஸ்பூன்,
துருவிய கேரட் - 2 டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு -5,
உலர் திராட்சை - 10,
துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன்.
செய்முறை:
சேமியாவை தண்ணீர் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத் தெடுக்கவும். பின் நீரை வடித்து விட்டு, குளிர்ந்த நீரில் 2 அல்லது 3 முறை அலசி நீரை நன்றாக வடித்து விடவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து முந்திரி, உலர் திராட்சை இரண்டையும் சிவக்க வறுத்தெடுத்த பிறகு, அதில் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சேமியா வில் சேர்க்கவும்.
தயிரைக் கடைந்து, பால், உப்பு ஆகிய வற்றையும் சேமியாவில் கலந்து கிளறி பின் மல்லித் தழை, துருவிய காரட், முந்திரி, உலர் திராட்சை கொண்டு அலங்கரிக் கவும்.
இதை குளிர வைத்து வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். (சற்று கெட்டியாக இருந்தால் மேலும் சற்று புளிப்பில்லாத தயிரைக் கடைந்து விட்டு அதில் சேர்த்து பரிமாறலாம்).