அருமையான பீட்ரூட் வடை செய்வது எப்படி? #Vadai





அருமையான பீட்ரூட் வடை செய்வது எப்படி? #Vadai

0
காரணமான உணவுகள் அதிகமாக எடுத்துக் கொண்டாலோ அல்லது முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு அல்சர் ஏற்படும் வாய்ப்பு அதிகம். 
அருமையான பீட்ரூட் வடை செய்வது எப்படி?
அப்படி அல்சரால் அவதிப் படுகிறவர்கள் பீட்ரூட்டை தங்களுடைய உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். தினமும் சாப்பிடத் தேவையில்லை. 

வாரத்தில் 3 நாட்கள் பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.

சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் பீட்ரூட் ஜூஸ் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். 
மாதத்தில் நான்கு நாட்கள் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொள்வதால் உடல் உறுப்புகள் சுத்தமடையும். 

பீட்ரூட்டில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 அதிகமாக இருப்பதால் இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். சுவையும் கூடும். பச்சையாக பீட்ரூட்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கியும் அதில் எலுமிச்சை சாறில் தொட்டும் சாப்பிடலாம். 

சரி இனி பீட்ரூட் துருவல் பயன்படுத்தி அருமையான பீட்ரூட் வடை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

என்னென்ன தேவை?

பீட்ரூட் துருவல் – 1 கப்,

வெங்காயம் – 1,

வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு – 1,

மஞ்சள் தூள் – சிறிது,

மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்,

கரம் மசாலாத் தூள் – 1 டீஸ்பூன்,

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,

உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு,

கொத்த மல்லித் தழை – சிறிது.
எப்படிச் செய்வது?
அருமையான பீட்ரூட் வடை செய்வது எப்படி?
பாத்திரத்தில் பீட்ரூட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், மசித்த உருளைக் கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நறுக்கிய கொத்த மல்லித் தழை 

அனைத்தை யும் சேர்த்து நன்கு பிசைந்து வடைகளாக தட்டி சூடான எண்ணெ யில் பொரித் தெடுத்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)