அறுசுவை உணவு என்பது?





அறுசுவை உணவு என்பது?

1 minute read
0
அறுசுவை உணவு என்பது இன்றைய சமூகம் என்ன என்று கேட்கும் நிலை உருவாகி இருக்கிறது. 
அறுசுவை உணவு

பண்டைய காலத்தில் உணவு என்றாலே அது அறுசுவை உள்ளது மட்டுமே. ஆனால் இன்றைய காலகாட்டத்தில் அது மாறி ஏதோபசி உள்ளதா கிடைத்த உணவை ருசித்தால் மட்டும் போதும் என்றாகி விட்டது. 

மேலும் அது இன்று கையில் காசு இருந்தால் ஒரு உணவு காசு இல்லையேல் அதற்க்கு தகுந்த உணவு என்று இன்று உணவும் சிக்கனமாகி விட்டது.  

பசி ருசி அறியாது என்பது போல் பசி இல்லையேல் ஒரு வேளை உணவும் இல்லை என்றாகி விட்டது 

இன்றைய இளைய சமுதாயத்திடம் .இருப்பினும் அந்த அறுசுவை உணவு என்றால் என்ன என்று நாம் அறிய வேண்டாமா? அறிந்து கொள்வோம் அறிந்ததை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வோம்.

காரம்:

உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்ற வற்றில் அதிகப் படியான காரச்சுவை அடங்கி யுள்ளது.

கசப்பு:

உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தி கூட்டும். சளியைக் கட்டுப் படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்ற வற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

இனிப்பு:

உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். 

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங் களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கி யுள்ளது. 

புளிப்பு:

இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். 

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங் காய் போன்ற வற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு:

இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மை யுள்ளது. 
அறுசுவை உணவு
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கி யுள்ளது.

உப்பு:

ஞாபக சக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் 

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

கீரைத் தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற வற்றில் அதிகமாய் இருக்கின்றது.

இன்று காலையில் சிக்கன் மாலையில் மட்டன், இரவில் ரிட்டன் என்பது போல் ஆகி விட்டது.
Tags:
Random Posts Blogger Widget

Post a Comment

0Comments

Post a Comment (0)