முருங்கைக்கீரை ஆம்லெட் செய்வது எப்படி?





முருங்கைக்கீரை ஆம்லெட் செய்வது எப்படி?

0
மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் சி இதில், நிரம்பி உள்ளது. 
முருங்கைக்கீரை ஆம்லெட்
பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ஏ இந்த கீரையில் உள்ளது. 

வாழைப்பழத்தில் உள்ளது போல 3 மடங்கு பொட்டாசியம் இந்த கீரையில் உள்ளது. அதனால், எந்த அளவுக்கு முருங்கைக்கீரையை நாம் சேர்த்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நோய்கள் நம்மை விட்டு விலகியே நிற்கும். 

முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும். 
தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது. உடல் எடை குறைய வேண்டுமானால், முருங்கைக்கீரையை விட பெஸ்ட் மருந்து வேறில்லை. 
முருங்கை இலையில் தினமும் சூப் போல வைத்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு அளவை குறைத்து உடல்எடை குறையும் என்கிறார்கள்.

தேவையானவை

முருங்கைக் கீரை - ஒரு கப்

முட்டை - 3

வெங்காயம் - ஒன்று

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க: தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

மல்லித் தழை - சிறிது (கறிவேப்பிலை அளவு)

சீரகம் - கால் தேக்கரண்டி

செய்முறை :

முதலில் வெங்காய த்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட் களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை கொரகொரப் பாக அரைத்துக் கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அத்துடன் முருங்கைக் கீரையைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும். 

ஒரு அகன்ற கோப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கலவை மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.
தவாவை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, ஆரோக்கிய மான முருங்கைக் கீரை ஆம்லெட் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)