ஹாட் அண்ட் சோர் ராகி கேக்ஸ் செய்வது எப்படி?





ஹாட் அண்ட் சோர் ராகி கேக்ஸ் செய்வது எப்படி?

0
சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு மிகச் சிறந்த உனவு என்பதில் மாற்று கருத்து இல்லை. ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும். 
ஹாட் அண்ட் சோர் ராகி கேக்ஸ்
அரிசியை விட குறைந்த அளவு கார்போ ஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது ரத்தில் உள்ள சர்க்கரை சிறப்பாக கட்டுபடுத்தும். அதாவது, லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்  (Low Glycaemic Index Food) உணவு வகையைச் சேர்ந்தது. 

ஆரோக்கியமாக இருக்க, பெரும்பாலானோர் சாதாரண கோதுமை மாவுக்குப் பதிலாக பார்லி மாவு, தினை மாவு அல்லது ராகி மாவையே பயன்படுத்து கின்றனர். 

எனினும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், ராகியை சாப்பிடக்கூடாது. சிலருக்கு இதை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். ராகியில் அமினோ அமிலங்கள், ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. 
இயற்கையாகவே உங்களை மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது, ஒற்றைத் தலைவலி நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது, எடையைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது. 

ஆனால் இதில் சில தீமைகளும் அடங்கியுள்ளது. எந்தெந்த பிரச்சனைகளில் ராகியை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன. ஆரோக்கியமான உணவு ஆகும். 
இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது. 

என்னென்ன தேவை?

ராகி / கேழ்வரகு மாவு - 2 கப்,

மோர் - 4 கப்,

உப்பு - தேவைக்கு,

பொடியாக நறுக்கிய பச்சை காய்கறிகள் - 1 கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2,

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க,

தேங்காய்த் துருவல் - சிறிது.

எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவை மோரில் உப்பு போட்டு கரைத்து வைக்கவும். மில்க் ஷேக் பதத்திற்கு இருக்க வேண்டும். 
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து காய்கறி களை போட்டு நன்கு வதக்கவும். பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி கேழ்வரகு கரைசலை ஊற்றவும். 

சிறிது நேரத்தில் கெட்டியாக உருண்டு வரும் பொழுது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும். ஆறிய பிறகு துண்டுகள் போட்டு மேலே தேங்காய் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)