டேஸ்டியான லெமன் - பன்னீர் கேக் செய்வது எப்படி?





டேஸ்டியான லெமன் - பன்னீர் கேக் செய்வது எப்படி?

0
பொதுவாக பன்னீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பன்னீரை நீங்கள் பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிட்டு வரலாம். எப்படி செய்தாலும் இது சுவை மிகுந்தது. 
டேஸ்டியான லெமன் - பன்னீர் கேக் செய்வது எப்படி?
இது எப்படி சுவை வாய்ந்ததோ அதைப் போல் சத்துக்களும் நிறைந்த ஒன்று. பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். 

ஆனால் இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.  இந்திய சீஸ் வகைகளில் ஒன்றான இந்த பன்னீர் சைவ பிரியர்களுக்கு விருப்பமான ஒன்று. இது உடலுக்கு ஆற்றலை அளிக்க கூடியது. 

பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. எனவே நீங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது உங்களுக்கு ஆரோக்கியத்தை தரும். மேலும் இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. 
இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உங்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் உதவுகிறது. 

செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. 

தேவையானவை :

பனீர் - 200 கிராம்,

கன்டென்ஸ்டு மில்க் - 1 டின்,

எலுமிச்சம் பழம் - 5 அல்லது 6 பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்,

மாரி பிஸ்கட் - 1 பாக்கெட்,

உருக்கிய வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :
லெமன் - பனீர் கேக்
பிஸ்கட்டை நொறுக்கவும். அதில் வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதை ஒரு கண்ணாடி டம்ளரில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பனீரை அரைத்து, கன்டென்ஸ்டு மில்க்குடன் சேர்க்கவும்.  அதில் எலுமிச்சைச் சாறை கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாகும் வரை சேர்க்கவும்.
ருசியை சரி பார்த்து, சரியாக இருந்தால், நிறுத்தவும். பிஸ்கட் கலவையின் மேல் அதை விட்டு, 3 மணி நேரத்துக்குக் குளிர வைத்துப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)