சூப்பரான மெது வடை செய்வது எப்படி? #Vadai





சூப்பரான மெது வடை செய்வது எப்படி? #Vadai

0
நம் உடல் உறுப்புகளை புதுப்பித்து உளுந்துபோகாமல், ஆற்றல் தருவதால் தா‌ன் இதற்கு உளுந்து என பெயர் வந்தது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து முக்கிய இடத்தில் உள்ளது. 
சூப்பரான மெது வடை செய்வது எப்படி?
உளுத்தம் பருப்பு அல்லது உளுந்து என்பது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தோன்றிய ஒரு வகை பயிராகும். இது நாடு முழுவதும் உள்ள இந்தியர்களால் பரவலாகப் பயிரிடப்படுகிறது. 

சுவை மட்டுமின்றி உளுத்தம் பருப்பில் பல நன்மைகள் அடங்கியுள்ளன.  தென் இந்திய உணவுகளில் குறிப்பாக நம்ம ஊர் தோசை, இட்லி, மெது வடை போன்ற உணவுகளின் முக்கிய மூலப்பொருள் உளுந்து தான். 

உளுந்து ஏராளமான கனிமங்களையும், ஊட்டச் சத்துகளையும் கொண்டுள்ளது. உளுந்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. 
இந்த நார்ச்சத்துக்கள் நீங்கள் உண்ணும் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களையும் உங்கள் உடல் உறிஞ்ச உதவுகின்றன. 

மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

உளுந்தில்  பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளது. 200 கிராம் உளுந்தில் ஏறத்தாழ 1500 மி.கி பொட்டாசியம் சத்து உள்ளது. 
உப்பு  உட்கொள்வதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை நீக்குவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க பொட்டாசியம் சத்து உதவுகிறது. உளுந்து 43 என்ற மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. 

எனவே, அவை உடனடியாக உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது. மேலும், உளுந்தில் அதிக அளவு ஆன்டி- ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. 

இவை ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், டைப் 2 நீரிழிவு நோயை வராமல் தடுக்கவும் உதவும்.
பாசிட்டிவாக சிந்தித்தால் வலி குறையும் !
என்னென்ன தேவை?

உளுந்து – 500 கிராம்.

பச்சரிசி மாவு – 100 கிராம்.

பச்சை மிளகாய் – 2.

சின்ன வெங்காயம் – 200 கிராம்.

கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு.

மிளகு – 10 கிராம்.

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
மெது வடை
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைக்கவும். இதனுடன் கட்டி விழாமல் பச்சரிசி மாவு சேர்த்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லி, 
கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்துப் பிசைந்து, வட்டமாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். உளுந்து அரைத்தவுடன் வடை சுட வேண்டும். நேரம் கடந்தால் மாவு புளிக்க ஆரம்பித்து விடும். 

அதே போல அதிகம் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டாம். பிறகு வடையில் எண்ணெய் இழுக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)