சுவையான பெஸ்டோ பாஸ்தா செய்வது எப்படி? #Pasta





சுவையான பெஸ்டோ பாஸ்தா செய்வது எப்படி? #Pasta

0
பாஸ்தாவை காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் சாப்பிலாம். பாஸ்தாவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ளதால் இது நம் உடலின் செயல்பாட்டுக்கு எரிபொருளாக அமைகிறது. 
சுவையான பெஸ்டோ பாஸ்தா செய்வது எப்படி?
சிலர் பாஸ்தாவை சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணமே அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் தான். பாஸ்தாவில் ப்ரோடீன், மினரல்ஸ், நார்சத்து உள்ளிட்ட பல நன்மைகளும் அடங்கியுள்ளது. 

இவை அனைத்தும் பாஸ்தாவின் தரத்துக்கு ஏற்றவாறு மாறுபடும். ஆதாவது பாஸ்தா பல வடிவங்களில் விற்கப்படுகிறது. சங்கு, நூடுல்ஸ் உள்ளிட்ட பல டிசைன்களில் பாஸ்தா விற்கப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் பாஸ்தாவை கோதுமை பயன்படுத்தி தயாரிக்கின்றனர். சில இடங்களில் மைதா மாவை பயன்படுத்தி பாஸ்தா தயாரிக்கப் படுகிறது. இவை இரண்டுக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளன. 

கோதுமை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாஸ்தாவில் அதிகளவு ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. உடலுக்கு தேவையான சக்தியை கோதுமை பாஸ்தா தருகிறது. மைதா மாவில் தயாரிக்கப்பட்ட பாஸ்தா உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதில்லை. 
நீடித்த ஆயுளைத் தரும் கார்போ ஹைட்ரேட் !
இன்னும் சொல்லப்போனால் மைதா பாஸ்தா உடல் எடையை எதிகாரிகச் செய்துவிடும். இரத்தத்தில் சக்கரையின் அளவையும் அதிகரித்து விடும். ஆகையால் எந்த வகை பாஸ்தாவை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் தான் கவனம் வேண்டும்.
தேவையானவை

பாஸ்தா - 3 கப்

ஆலிவ் ஆயில் - 4 மேசைக் கரண்டி

எலுமிச்சை சாறு - 2 மேசைக் கரண்டி

மேயனீஸ் - ஒரு கப்

பாலக் கீரை - ஒரு கப்

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

பைன் நட்ஸ் - 2 மேசைக் கரண்டி

பூண்டு - 3 மேசைக் கரண்டி

பேசில் இலை - ஒரு கட்டு

உப்பு - தேவையான அளவு

பெஸ்டோ சாஸ் செய்ய:

வால்நட் - 10

உப்பு - ஒரு தேக்கரண்டி

பச்சை பட்டாணி - 3/4 கப்

பைன் நட்ஸ் - 2 மேசைக் கரண்டி

ஆலிவ் ஆயில் - ஒரு கப்

மிளகு - ஒரு தேக்கரண்டி

பார்மிஜான் சீஸ் - 4 மேசைக் கரண்டி
பார்மிஜான் சீஸ் - ஒரு கப்
தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி?
செய்முறை :
பெஸ்டோ பாஸ்தா
முதலில் முதலில் சாஸ் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். நட்ஸ், மிளகை ஒரு சுற்று சுற்றவும். பிறகு பேசில் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து சுற்றவும். 

கடைசியாக சீஸ் சேர்த்து நன்கு அரைத்து வைக்கவும். இதை செய்து வைத்துக் கொண்டால் எப்போ வேண்டு மென்றாலும் பெஸ்டோ பாஸ்தா செய்யலாம்.

காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு சிறிதளவு ஆலிவ் எண்ணெய் மேலே ஊற்றி பிரிட்ஜில் வைத்து பிறகு உபயோகப் படுத்தலாம். ஒரு பெரிய வாய் அகலமான பாத்திரத்தில் ஒன்றுக்கு (பாஸ்தா) நான்கு மடங்காக தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும் தீயை குறைத்து பாஸ்தா சேர்த்து 10-15 வரையில் வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடிக்கட்டி குளிர்ந்த நீரில் கழுவி சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து கிளறி வைக்கவும். 

பார்த்து கிளறவும் உடைந்து விடும். ஆற வைக்கும் போதும் வாய் அகலமான பாத்திரமாக இருந்தால் ஒன்றோ டோன்று ஒட்டாமல் இருக்கும். 

அரைத்த பெஸ்டோவில் முக்கால் கப் எடுத்து பட்டாணி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
ஐந்து நிமிடம் சென்று கீரையை அரைத்து இதில் சேர்க்கவும். கீரை நன்றாக வெந்ததும் மேயனீஸ் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு பாஸ்தாவை இதில் கொட்டி கிளறவும். 

உப்பு சரி பார்த்து, மிளகு தூள், எலுமிச்சை சாறு, மீதமுள்ள சீஸ், மற்றும் நட்ஸ் சேர்த்து கிளறவும். சுவையான பெஸ்டோ பாஸ்தா தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)