சண்டே மார்னிங், இன்னைக்கு நான்வெஜ் டே. மார்னிங் சமைக்க காய்கறி எல்லாம் எதுவும் கிடையாது. மத்யான, வேற ஹெவி லஞ்ச் சாப்பிடப் போறோம்.
அதனால காலையில லைட்டா உப்புமா சாப்பிட்டா போதும்... ராத்திரி திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்க, சாப்பிடாம வேற வந்துட்டாங்க, சட்டுன்னு அவங்களுக்கு என்ன சமைச்சுத் தர்றது,
அட ரவை இருக்கப் பயமேன், உப்புமா கிளறிப் போட்டுற வேண்டியது தான் வேறென்ன... இப்படி சகல அவசரகாலத்துலயும் நமக்கு கை கொடுக்கக் கூடிய நண்பன் தான் இந்த உப்புமா.
ஆனால் ரவை கொண்டு குஸ்கா செய்திருக்கிரீர்களா? இந்த பதிவில் அதையும் செய்து பர்க்கலாம் வாங்க..
தேவையானவை
மெல்லிய ரவை - ஒரு கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்
தண்ணீர் - ஒரு கப்
கொத்தமல்லித் தழை - சிறிது
நெய் - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வாணலி யில் நெய் விட்டு ரவையை வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். அதே வாணலி யில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
பின்னர் தாளித்த வற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்
வதக்கிய வற்றுடன் தேங்காய்ப் பால், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். இந்த தேங்காய்ப் பால் கலவை கொதித்த பின்னர் ரவையை சேர்த்து கை விடாமல் கிளறி மூடி வைக்கவும்.
5 நிமிடம் கழித்து திறந்து கிளறி வெந்த பின் கொத்த மல்லித் தழை தூவி இறக்கவும். இப்போது ரவை குஸ்கா தயார்.
குறிப்பு :
ரவை உப்புமா போல் இருந்தாலும் இதில் தேங்காய் பால் சேர்ப்பதால் உப்புமாவி லிருந்து சுவை வேறுபடும்.பாக்ஸ் இல் வைக்கவும்