சூப்பரான ஸ்பைசி க்ராப் மசாலா செய்வது எப்படி?





சூப்பரான ஸ்பைசி க்ராப் மசாலா செய்வது எப்படி?

0
கடல் உணவுகள் என்றாலே, சத்துக்கள் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. அதில் மிக முக்கியமானது நண்டு வகைகள் ஆகும். அந்த அளவுக்கு ஆரோக்கியம் நண்டிற்குள் உள்ளது.
சூப்பரான ஸ்பைசி க்ராப் மசாலா செய்வது எப்படி?
புரோட்டீன்கள் அதிகம் உள்ளதால் தான், நண்டு உடலுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளன.. அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது.. தசைகளின் சீரமைப்புக்கு இந்த நண்டுகள் உதவுகின்றன. 

குறைவான கொழுப்பு உள்ளதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களிலிருந்து காத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இதில், வைட்டமின் A உள்ளதால், கண்பார்வைக்கு பெரும் நன்மை தருகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம், செலெனியம், தாமிரம் இப்படி எல்லாமே நண்டுக்குள் உள்ளது. 
இத்தகைய இதய நோயாளிகளுக்கு நண்டு இறைச்சி நல்ல ஒரு உணவாக அறியப்படுகிறது. மூளை சிறப்பாக செயல்படவும், நரம்பு மண்டலம் செயல்பாடு களுக்கும் இந்த நண்டு உதவி செய்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவே நண்டினை எடுத்துக் கொள்ள வேண்டும். 

கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது என்பார்கள். அதனால் மருத்துவரை கலந்தோசித்து விட்டு உணவில் சேர்த்து கொள்ளலாம்.
தேவையானவை

நண்டு - 1 கிலோ

எண்ணெய் - 100 மில்லி

தக்காளி - 200 கிராம்

கறிவேப்பிலை - 2 இணுக்கு

மல்லி இலை - ஒரு கைப்பிடியளவு

மிளகாய் வற்றல் - 4

மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்

மிளகு - 2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்

வெங்காயம் - 100 கிராம்

மல்லி - 2 டீஸ்பூன்

சோம்பு - அரை ஸ்பூன்

தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் 

முந்திரி  - 4 (விருப்பப் பட்டால்)

பச்சை மிளகாய் - 2 - 4

உப்பு - தேவைக்கு
செய்முறை :
ஸ்பைசி க்ராப் மசாலா
முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி நண்டு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து கொதி வந்ததும் தண்ணீரை வடிகட்டி விடவும். 

வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து வற்றல், கறிவேப்பிலை போடவும். 

வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து மூடி சிம்மில் வைக்கவும். மிளகு, மல்லி, சீரகம், சோம்பு லேசாக வறுத்து கொள்ளவும்

மிக்ஸியில் மிளகு, சீரகம், மல்லி, சோம்பு தூள் செய்து அத்துடன் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். வாணலியில் வெங்காயம், தக்காளி கிரேவி மசிந்து வந்தவுடன் நண்டை சேர்க்கவும்
பின்னர் மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். உப்பு பார்த்து சேர்க்கவும், கொஞ்சம் கூடினாலும் கடுத்து விடும். பின்பு அத்துடன் அரைத்த மசாலா, தேங்காய் கலவை சேர்த்து 
15 நிமிடம் வைத்து தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் தெளிந்து கெட்டியான வுடன் இறக்கவும். சூப்பர் சுவையுள்ள ஸ்பைசி க்ராப் மசாலா ரெடி.பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)