சூப்பரான வாழைத்தண்டு சாட் செய்வது எப்படி?





சூப்பரான வாழைத்தண்டு சாட் செய்வது எப்படி?

0
வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாழைப்பழங்கள் போன்று வாழைத் தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. 
சூப்பரான வாழைத்தண்டு சாட் செய்வது எப்படி?
இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இது தசைகள் சேதமில்லாமல் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

வாழைத்தண்டு கூட்டாகவோ. பச்சையாக சாலட் செய்தோ, பொரியலாக்கியோ, எளிதான முறையில் சாறாக்கியோ குடிக்கலாம். வாழைத்தண்டு வைட்டமின் பி 6 என்னும் உயர்ந்த சத்தை தன்னுள் கொண்டுள்ளது. 

இது உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோ குளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடும். வாழைத்தண்டு பொட்டாசியத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இது கொழுப்பு மற்றூம் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிசை அளிக்க உதவும்.

வாழைத்தண்டை அவ்வபோது சேர்த்து வருவதன் மூலம் உடலில் அதிக இரத்த அழுத்தத்தை கொண்டிருப்பவர்கள் கட்டுக்குள் வைக்கலாம். குறைந்தது உடலுக்கு ரத்த அழுத்த பிரச்சனையால் உண்டாகும் விளைவுகளின் அபாயத்தை குறைக்க செய்யும். 
சாட் என்பது கேரட், வெங்காயம், தக்காளி, கொத்து மல்லி தழை மற்றும் மிளகாய்த் தூள், மல்லித் தூள், சாட் மசாலா பொடி போன்றவற்றுடன் பொரி சேர்த்து கலக்கி செய்யப்படும் ஒரு உணவு வகை. 

அதனை பொரி கலவை என்று தமிழில் கூறலாம். இங்கு அதனுடன் வாழைத் தண்டை பொடியாக நறுக்கி சேர்த்துள்ளேன்.
வாழைத் தண்டு நார் சத்து நிறைந்த உணவு. வாழைத் தண்டு கொண்டு பொதுவாக வாழைத் தண்டு பொரியல் மற்றும் தயிர் பச்சடி மட்டுமே செய்வது வழக்கம். இங்கு வாழைத் தண்டை உபயோகித்து சாட் செய்யும் முறையை காணலாம்.

தேவையானவை :

அரிசிப் பொரி - 1/2 கப் 

சோளப் பொரி - 1/2 கப் 

கேரட் சீவியது - 1/3 கப் 

வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது - 1/2 கப் 

தக்காளி, பொடியாக நறுக்கவும் - 1 

வெங்காயம், பொடியாக நறுக்கவும் - 1 

கொத்தமல்லி பொடியாக நறுக்கியது - 1/4 கப் 

தூள் & சாஸ் :

கொத்த மல்லி தூள் - 1/2 Tsp 

சீரகத் தூள் - 1/2 Tsp 

மஞ்சத் தூள் - 2 சிட்டிகை 

மிளகாய்த் தூள் - 1/4 Tsp  

சாட் தூள் - 1/4 Tsp 

உப்பு - 1/4 Tsp 

கருப்பு உப்பு [ ராக் சால்ட் ] - 1/2 Tsp 

இனிப்பு & புளிப்பு புளி சாஸ் - 1/2 Tsp 

தேன் - 1/4 Tsp 

மேலே கொடுக்கப் பட்டுள்ள காய்கறிகள் மற்றும் தூள்களை அவரவர் சுவைக்கேற்ப கூட்டி குறைத்துக் கொள்ளவும்.

செய்முறை :
சூப்பரான வாழைத்தண்டு சாட் செய்வது எப்படி?
பொரி நீங்கலாக கொடுக்கப் பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். பின்பு பொரி இரண்டையும் சேர்த்து கலக்கவும். உப்பு மற்றும் காரம் சரி பார்க்கவும்.
சூரிய ஒளி தரும் சூப்பரான வைட்டமின் !
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்த மல்லி தழை தூவி சுவைக்கவும். கலந்தவுடன் சாப்பிட்டு விடவும். இல்லையெனில் தண்ணீர் விட்டு நசநசவென ஆகிவிடும். 

குறிப்பு : 

மிளகாய் தூளுக்கு பதிலாக மிளகுத் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)