பலரது வீட்டில் வீட்டை சுற்றி பல மூலிகை செடிகளை தங்களது தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர்.
அத்தகைய செடிகளில் கற்பூரவள்ளி (ஓமவல்லி) செடியும் ஒன்று. மற்ற மூலிகை செடிகளை காட்டிலும் கற்பூரவள்ளி செடியானது அதிக நறுமணத்துடன் காணப்படுகிறது.
இதில் எண்ணற்ற பலன்கள் உள்ளது. கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
பொதுவாக குளிர்காலம் வந்து விட்டாலே சளி, இருமல் தொண்டை வலி போன்றவை ஏற்படுவது சகஜம். அவர்கள் அடிக்கடி மருந்துகள் எடுப்பது சில சமயங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அதற்கு இயற்கைமுறையில் ஒரு சில பொருட்கள் உள்ளன. அதில் கற்பூரவல்லி பெரிதும் உதவுகின்றது. இதனை இஞ்சியுடன் சேர்த்து குடிப்பது நல்ல நிவாரணம் தரும்.
தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம் என்று இங்கே பார்ப்போம்.
தேவையானவை
டீத்தூள் - ஒரு டீஸ்பூன்
கற்பூரவல்லி - 5 இலை
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை :
கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது டீத்தூளுடன், கற்பூரவல்லி இலை, இஞ்சி துருவல் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
நன்றாக கொதித்து டீ ரெடியானதும் இறக்கி வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகவும். இப்போது கற்பூரவல்லி இஞ்சி டீ ரெடி.
குறிப்பு
உங்கள்களை சுவைக்க தூண்டும் எண்ணெற்ற டீ மற்றும் காபி வகைகள். நீங்கள் காலை, மாலை, இரவு என விரும்பி நேரத்தில் சாப்பிடலாம்.
எப்போதும் உணவு பொருட்கள் தூய்மையாக இருப்பது நன்று. உணவு
எப்போதும் உணவு பொருட்கள் தூய்மையாக இருப்பது நன்று. உணவு