இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மசாலா பொருட்களிலும் ஒவ்வொரு மருத்துவ பயன்கள் ஒளிந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு துரித உணவுகளை விட்டு வீட்டில் உள்ள மசாலா பொருட்களால் ஆன உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும்.
அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத் தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.
தேவையானவை
துவரம் பருப்பு - ஒரு கப்
ஆப்பிள் - அரை துண்டு
தேங்காய் துருவல் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
உருளைக் கிழங்கு - ஒன்று
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப
எலுமிச்சைச் சாறு
வெண்ணெய் - தலா 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிப்பொடிக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
மிளகு - 2 டீஸ்பூன்
கொத்த மல்லி - 3 டீஸ்பூன்
மஞ்சள் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 10
சோம்பு - அரை டீஸ்பூன்
செய்முறை :
முதலில் கறிப்பொடிக்கு கொடுத்துள்ள வற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் கறிவேப் பிலையை போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக் கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும்.
இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் கறிப்பொடி சேர்த்து, துவரம் பருப்பை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
Tags: