சூப்புகள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் ஒரு உணவு. இவை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் உண்ணக்கூடிய ஒரு உணவு வகை. சூப்புகளில் பல வகையுண்டு சிக்கன் வகை.
மட்டன் சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், தக்காளி சூப். என்ன தான் இத்தனை சூப் வகைகள் இருந்தாலும் சூப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது ஆட்டு கால் சூப் தான். அதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு.
ஆனால் அசைவம் உண்ணாதவர்கள் மத்தியில் வெஜிடபிள் மற்றும் மஷ்ரூம் சூப்பே டாப் சாய்ஸ் ஆக இருக்கிறது. சூப்கள் ருசியானவை மட்டுமல்ல, செய்வதற்கு எளிதானவை கூட.
ஆரோக்கியமான உணவை நீங்கள் எப்போதும் விரும்பினால், இந்த பரங்கிக்காய் சூப் செய்து கொடுங்கள். இது தயாரிக்க 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
காய்கறிகளை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சூப்பில் இந்த பரங்கிக்காயை சேர்த்து வெகு சுலபமாக செய்து கொடுத்து விடலாம்.
தேவையானவை :
தோல் சீவி துண்டுகளாக்கிய பறங்கிக்காய் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 4 பல்
வெள்ளரி விதைகள் - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கி வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் பறங்கித் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்.
ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை மிதமாகச் சூடு செய்து மிளகுத் தூள் தூவி இறக்கவும். மேலே வெள்ளரி விதைகள் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
பறங்கிக் காயில் வைட்டமின் - பி, வைட்டமின் - இ, இரும்புச் சத்து மற்றும் சில கனிமச் சத்துகள் உள்ளன. வெள்ளரி விதை, சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபள பாக்கும். முடி வளர்ச்சிக்கும் உதவும்.
பரங்கிக்காய் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். கொரோனா காலத்தில், நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விரும்பினால், அதற்கு ஏற்ற காய் பரங்கிக்காய் ஆகும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர் களுக்கும், பரங்கிக்காய் வப்பிரசாதமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைத் தருகிறது.
பூசணிக்காய் சாப்பிடுவது மழைக் காலத்திலும் குளிர் மற்றும் இருமலில் பெரும் நிவாரணம் கிடைக்கிறது.
பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டின் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், விரைவாக குணமடையவும் உதவுகின்றன.
Tags: