அருமையான கிரிஸ்பியான கோபி 65 செய்வது எப்படி? #friedrice





அருமையான கிரிஸ்பியான கோபி 65 செய்வது எப்படி? #friedrice

0
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்தப் பூக்களில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. 
அருமையான கிரிஸ்பியான கோபி 65 செய்வது எப்படி?
காலிஃப்ளவர் பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

காலிஃப்ளவரரில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும்.

இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள்  தீண்டாமல் காத்துக் கொள்ள முடியும். 

காலிஃப்ளவர் மன அழுத்தம், இதய நோய்களை குணமாக்கும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா உள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
உங்களுக்கு அலர்ஜி இருந்தால் காலிஃபிளவர் சாப்பிட வேண்டாம். குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் காலிஃபிளவர் அதிகம் சாப்பிடக்கூடாது. 

ஏனெனில் காலிஃபிளவரில் உள்ள கந்தகம் பால் மூலம் குழந்தைக்கு சென்றடைகிறது. அந்த குழந்தைகளுக்கு வாய்வு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வரலாம். 
கோபி 65 என்பது காலிஃபிளவரால் செய்யப்பட்ட ஒரு பிரபலமான மிருதுவான வறுத்த சிற்றுண்டியாகும். 

கோபி 65 அல்லது காலிஃபிளவர் 65 பல உணவகங்களில் சிற்றுண்டியாகவோ அல்லது ஸ்டார்ட்டராகவோ அல்லது பசியை உண்டாக்கும் உணவாகவோ மிகவும் பிரபலமானது. 

காலிஃபிளவர் பொரியல் கோபி 65 / காலிஃபிளவர் 65 என்று பிரபலமாக அறியப்படுகிறது.

உங்களுக்கு வீட்டு கிரிஸ்பியான கோபி 65 ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிரிஸ்பியான கோபி 65 ரெசிபியின் செய்முறையை படித்து செய்து சுவைத்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானவை : 

ஆய்ந்த காலிஃப்ளவர் – ஒரு கப் (சூடான தண்ணீரில் போட்டு வடிகட்டவும்) 

இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் 

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன் 

சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை 

கார்ன் ஃப்ளார் (சோள மாவு) – 4 டீஸ்பூன் 

கடலை மாவு – 5 டீஸ்பூன் 

அரிசி மாவு – 2 டீஸ்பூன் 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு, 

செய்முறை: 
காலி ஃப்ளவருடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த் தூள், ஃபுட் கலர், கார்ன் ஃப்ளார், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்துப் பிசிறவும். 
உயிர் வாழும் வரை ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை !
வாணலியில் எண்ணெயைக் காய விட்டுப் பூக்களை எடுத்து எண்ணெயில் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, பொன்னிற மாகப் பொரித் தெடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)