டேஸ்டியான துளசி இலை டீ செய்வது எப்படி?





டேஸ்டியான துளசி இலை டீ செய்வது எப்படி?

0
துளசி இலைகள் புனிதமானது மற்றும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட ஒரு அற்புத மந்திர மூலிகையாக கருதப்படுகிறது. துளசி பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. 
தினமும் சிறிதளவு துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது முன்னோர்கள் மற்றும் நியுணர்களின் கருத்தாக இருக்கிறது. 

துளசியின் சில இலைகளை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இருமல் மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபட இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. 

துளசி டீயை தினமும் உட்கொள்வது அமைதியான விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. 

நீங்கள் ஒரு டீ பிரியராக இருந்தால் ஒரு முறை இந்த துளசி டீயையும் முயற்சி செய்து பாருங்கள். துளசி ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும். 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த துளசி இலைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய் தொற்றுகளை தடுக்கவும் உதவுகின்றன.சரி இனி துளசி இலை பயன்படுத்தி டேஸ்டியான துளசி இலை டீ செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை 

துளசி இலை 

ஏலத்தூள், 

வெல்லம் 

செய்முறை : 

துளசி இலையை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஏலத்தூள், வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பயன்படுத்தலாம்.

பக்க விளைவு
துளசியின் அளவற்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் துளசி இலையால் பக்க விளைவுகளும் ஏற்படும் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

துளசி இலைகள் கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியத்தையும் கருவையும் பாதிக்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது கருச்சிதைவுக்கு கூட வழிவகுக்கும். 

மூலிகையானது கருப்பைச் சுருக்கத்தை ஏற்படுத்தக் கூடும், அது ஆபத்தானது. துளசி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. 

ஆனால் யாராவது ஏற்கனவே நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால், துளசி இலைகளை உட்கொள்வது அதன் விளைவை அதிகரிக்கலாம் என சொல்லப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)