மூங்கில் அரிசியால் உண்டாகும் பயன்கள் !





மூங்கில் அரிசியால் உண்டாகும் பயன்கள் !

மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் எப்போதோ ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வு. மூங்கில்கள் அதன் ஆயுள் முடியும் காலகட்டத்தில் தான் பூக்கின்றன. 
மூங்கில் அரிசியால் உண்டாகும் பயன்கள் !
ஒரு முறை பூத்த பிறகு, விதைகளை உற்பத்தி செய்து விட்டு அவை இறந்து விடுகின்றன. விதைகளை உற்பத்தி செய்யும் போது அதிக ஆற்றல் தேவைப் படுவதால், அதற்குப் பிறகு மூங்கில் இறந்து விடுகிறது என்பது சில ஆய்வாளர்கள் கருத்து.

மூங்கில் அரிசியை மருத்துவக் குணம் மிக்கதாகக் கருதுவதால், மக்கள் விரும்பி வாங்கு கிறார்கள். 
உடம்பை இரும்பாக்கும் உன்னதத்தைத் தன்னகத்தே கொண்டு நோய் தீர்க்கும் மூங்கிலரிசியை முறையாய் சாப்பிட்டு வளமுற வாழ வேண்டும் என்பதே சித்தர்களின் ஆசையாகும்.

 மூங்கிலி லிருந்து பெறப்படும் மூங்கி லரிசியைச் சமைத்து உண்டு வர, 

• உடல் திடம் உண்டாகும். 

• உடல் இறுகும். 

• கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும் 

• மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. 

* உடல் வலிமை பெறும். 

* சர்க்கரை அளவை குறைக்கும். 

* எலும்பை உறுதியாக்கும். 

* நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும். 

* 60 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்.

இந்த மூங்கில் பூக்கள் மூங்கில் நெல்லை விளை விக்கின்றது. காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கி யமாக இருப்பதற்கு காரணமான
உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.

மூங்கி லரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் திடம் பெரும். உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது. 

சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும். 
*மக்கட்பேறு உருவாக்குவதில் கூட முக்கிய பங்கு வகிக்கிறது.பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் மக்கட்பேறு இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இதற்கு மூங்கில்அரிசியும் ஒரு காரணம். 

மூங்கில் அரிசி கஞ்சி செய்முறை 

தேவையான பொருட்கள்: 

மூங்கில் அரிசி – 150 கிராம் 

நொய் அரிசி – 150 கிராம், 

சீரகம், ஓமம் – தலா அரைத் தேக்கரண்டி, 

பூண்டு – 6 

பல், சுக்கு – ஒரு துண்டு, 

நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி, 

உப்பு – தேவைக்கு 

செய்முறை: 
மூங்கில் அரிசியால் உண்டாகும் பயன்கள் !
மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகிய வற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும்.  பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.

அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.  

முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்க விடவும்.
வெயிலை சமாளிக்க ஜில்லுன்னு சாப்பிடுங்க !
நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். 

மருத்துவப் பயன்: 
மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக் கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறை பாட்டைப் போக்கும் தமிழகத்தில் கன்னியாகுமாரி, ஊட்டி, கூடலூர், பாபநாசம் போன்ற மலைப் பகுதிகளிலும், கேரளா, குஜராத் போன்ற பகுதிகளி லும் மூங்கில் அரிசி உணவு சிறப்பானது.
Tags: