தமிழ்நாட்டு பாரம்பரியத்திலும், விருந்தோம்பலிலும், இன்று வரை அதே முன்னணி இடத்தை 'வாழையிலை' வகித்து கொண்டிருக்கிறது.
அப்படியென்ன வாழையிலையின் ஸ்பெஷாலிட்டி? வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து, ஒரு ஓரத்தில் உப்பை வைத்து, அதற்கு பிறகு ஒவ்வொரு உணவுப்பொருளையும் பரிமாறுவார்கள்.
ஆனால், வாழையிலையில் எப்படி உணவு பரிமாற வேண்டும் என்று சித்த மருத்துவத்திலேயே விரிவாக தரப்பட்டுள்ளதாம்.
முதலில் நுனி இலையிலிருந்து உப்பு, சட்டினி, ஊறுகாய், பச்சடி, காய்கறி, வடகம், வடை, சித்திரான்னம், அப்பளம், போன்றவற்றை பரிமாற வேண்டும்.
அதன் பக்கத்திலேயே மூன்று வாழை இலை தொன்னைகளில், தனித்தனியே கூட்டு, ரசம், குழம்புகளை ஊற்றி, பனியாரம், பாயாசம் வைத்து இறுதியாக, சோறும் அதன் அருகில் மற்றொரு தொன்னையில் நெய்யும் வைத்து உபசரிக்க வேண்டுமாம்.
வாழையிலையில் உண்பதால் ஆயுள் கூடும் என்கிறார்கள். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுது தான் சூட்டின் தாக்கம் குறையும். சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
பார்க்கின்சன் நோயை வெல்ல என்ன செய்வது?
சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
சோரியாசிசு(ஸ்), தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான்.
அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது.
அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பொலீத்தின் (polythene) கடதாசிதான் இங்கு இருக்கும் உணவு விடுதிகளில் உணவு கிடைக்கிறது.
இது கால மாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர்.
அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும் போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரிய வரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
நிலவேம்புக் குடிநீர் எப்போது குடிக்க வேண்டும்?
வாழை மரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்கு மளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.