அன்றாடம் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுகளும் செரிமானம் அடைய எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சாப்பிடும் உணவு எப்படி செரிமானம் அடைகிறது?
நாம் சாப்பிடும் உணவு, வாயில் இருந்து உணவுக்குழாய் வழியாக இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய உறுப்பு களுக்கு சென்று செரிமானம் அடைகிறது.
அதுவும் செரிமானத்தின் தொடக்கமான நம் வாயில் சுரக்கும் எச்சில் பெரிய மூலக்கூறுக ளாக இருக்கும் உணவுப் பொருட்களை ஈரப்பதமாக மாற்றி,
உடைத்து எளிதாக உணவுக் குழாய் வழியாக இரைப்பையை நோக்கிச் செல்ல வைக்கிறது.
இரைப்பையில் தங்கியிருக்கும் உணவு மூலக்கூறுகளை செரிமானம் அடைவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், பெப்சினோஜன் (Pepsinogen), லிப்பேஸ் (Lipase) மற்றும் அமிலேஸ் (Amylase) ஆகிய செரிமான திரவங்கள் உதவுகின்றது.
இவ்வாறு செரிமானம் அடைந்த உணவுகள், சிறுகுடலுக்கு சென்று முழுமையாக ஜீரணமடைகிறது.
பின் அதிலிருந்து கிடைக்கும் சக்தியை கல்லீரல் சேமித்து அதை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் தேவையான சக்தியாக அளிக்கிறது.
அதன் பின் பெருங்குடலில் நீர் மூலக்கூறுகள் உறிஞ்சப்பட்டு, ரத்த ஓட்டத்தில் கலந்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகள் மலக்குழாய் வழியாக வெளியேற்றப் படுகிறது.
உணவுகள் செரிமானம் அடைவதற்கான நேரம்?
வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், அது உடனடியாக குடலுக்குச் சென்று விடும்.
பழங்களைச் சாறுகளாக எடுத்துக் கொண்டால்,
அது செரிமானம் அடைய 15-20 நிமிடங்கள் வரை ஆகும்.
திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி போன்ற கெட்டியான பழச்சாறுகள்
மற்றும் காய்கறி சூப்கள் சாப்பிடும் போது, 20- 30 நிமிடங்கள் செரிமானம் அடைவதற்கு எடுத்துக் கொள்ளும்.
பால், பாலாடைக் கட்டி, சோயா பீன்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட்டால், அது செரிமானம் அடைவதற்கு 2 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.
வேக வைக்காத பழங்கள் மற்றும் காய்கறிகளை அப்படியே சாப்பிட்டால், அது செரிமானம் அடைவதற்கு 30-40 நிமிடங்கள் வரை ஆகும்.
வேக வைத்த காய்கறிகளை சாப்பிட்டால், அது செரிமானம் அடைவதற்கு, 45-50 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.
வேக வைத்த காய்கறிகளை சாப்பிட்டால், அது செரிமானம் அடைவதற்கு, 45-50 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.
தானிய வகையான அரிசி, ஓட்ஸ் மற்றும் பருப்பு உணவுகளை சாப்பிட்டால், அது செரிமானம் அடைவதற்கு ஒன்றரை மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.
விதைகள் மற்றும் கடலை வகை உள்ள உணவுகள் சாப்பிட்டால், அது செரிமானம் அடைவதற்கு, 2- 3 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.
மீன் வகை உணவுகளை சாப்பிட்டால், அவைகள் செரிமானம் அடைவதற்கு, 30- 60 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.
சிக்கன் உணவுகளை சாப்பிட்டால், அது செரிமானம் அடைவதற்கு, 2 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.
ஆடு மற்றும் மாட்டுக்கறி போன்ற உணவு வகைகளை சாப்பிட்டால், அது 3-4 மணி நேரம் வரை செரிமானம் அடைவதற்கு எடுத்துக் கொள்ளும்.
குறிப்பு
நாம் சாப்பிடும் உணவுகள் அனைவருக்கும் ஜீரணமாகும் நேரம் ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில் அது ஒவ்வொருவரின் உடல் தன்மை, உணவு வகைகள், சாப்பிடும் உணவின் அளவு ஆகிய வற்றை பொறுத்து வேறுபடலாம்.
எனவே இரவில் நாம் சாப்பிடக் கூடிய உணவுகளின் செரிமான மாகும் நேரத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ற இடைவெளி நேரத்தை விட வேண்டும்.