உடல் எடையை குறைக்க விரும்பும் பலருக்கும் ஏற்படுகின்ற பெரிய குழப்பம் இதுதான். டோஃபு எடுத்துக் கொள்வதா அல்லது பன்னீர் எடுத்து கொள்வதா என்பதை தீர்மானிப்பதே ஆகும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அல்லது சமநிலையில் வைத்திருக்க விரும்புபவர்கள் இந்த இரண்டு உணவுப் பொருள்களைத் தான் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.
உதாரணத்திற்கு பன்னீர் என்பது பாலில் உள்ள முழுமையான கொழுப்பில் இருந்து தயாரிக்கப் படுவதாகும். இதில் கொழுப்பு, கால்சியம், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
டோஃபு என்பது சோயா பாலில் இருந்து தயாரிக்கப் படுவது ஆகும். இதிலும் ஊட்டச்சத்து நிரம்பியுள்ளது. சோயாபீன் பாலின் தயிர் வடிவத்திற்கு பெயர் தான் டோஃபு என்று அழைக்கப் படுகிறது.
சாஃப்ட் டோஃபு, சில்கென் டோஃபு, ஃபர்ம் டோஃபு, பெர்மெண்டெட் டோஃபு என பல வகைகளில் இது கிடைக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை கொண்டது. இதில் அதிக புரதம் உள்ளது.
அதிகப் படியான அமினோ அமிலங்கள் கிடைக்கும். வெவ்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியது. கால்சியம், மெக்னீசியம், காப்பர், விட்டமின் ஏ, மாங்கனீஸ் போன்றவை இடம் பெற்றுள்ளன.
சரி இனி டோஃபு பயன்படுத்தி டேஸ்டியான தவா கிரில்டு டோஃபு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
என்னென்ன தேவை?
டோஃபு - 250 கிராம்,
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கடுகு விழுது - 1 டீஸ்பூன்,
கடலை மாவு - 1/4 கப்,
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்,
தயிர் - 1/2 கப்,
கையில் கசக்கிய ஓமம் - 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,
காஷ்மீர் மிளகாய்த் தூள் - தேவைக்கு,
கரம் மசாலாத் தூள் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
பாதம் மரத்து போனால் எந்த நோயின் அறிகுறி?
எப்படிச் செய்வது?
டோஃபுவை பெரிய சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து மஞ்சள் தூள், கடலை மாவு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து இறக்கி ஆறவிடவும்.
பாத்திரத்தில் டோஃபு, கடலை மாவு கலவை, வெண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தை யும் ஒவ்வொன்றாக சேர்த்து, டோஃபு உடையாமல் கலந்து 15 நிமிடங்கள் ஊற விடவும்.
பின்பு கிரில் தவாவை மிதமாக சூடு செய்து டோஃபுவை சேர்த்து தேவையான வெண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு எடுத்து சாட் மசாலா தூவி சூடாக பரிமாறவும்.