டேஸ்டியான மின்ட் டீ செய்வது எப்படி?





டேஸ்டியான மின்ட் டீ செய்வது எப்படி?

0
உடல் எடையை அதிகரிப்பது இன்றைய காலத்தில் அனைவரின் பிரச்சனையாக மாறி விட்டது. இதனால் மக்களும் சங்கடத்தை சந்திக்க நேரிடுகிறது. 
மின்ட் டீ
அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும் இந்த மாதிரியான பிரச்சனையால் சிரமப்பட்டால், இனி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், அதிகரிக்கும் 

உடல் எடையை அதிவேகமாக குறைக்க நீங்கள் புதினா தேநீரை உட்கொள்ளலாம். அத்துடன் இந்த தேநீரில் பல பிரச்சனைகளில் இருந்து விடுபட வேலை செய்யும் அற்புத கூறுகள் உள்ளன. 

அதிகரித்து வரும் உடல் எடையில் இருந்து விடுபட டேஸ்டியான மின்ட் டீ செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

தேவையானவை 

புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு 

சர்க்கரை - தேவைக்கேற்ப 

எலுமிச்சை சாறு - சில துளிகள் 

டீ பேக் - ஒன்று 

செய்முறை : 
முதலில் புதினா இலைகளைச் சுத்தம் செய்து, ஒன்றரை கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து புதினா வாசமும் சுவையும் நன்கு நீரில் ஊறிய பிறகு எடுத்து வடிகட்டவும். 

வடிகட்டிய நீரை இரண்டு கோப்பைகளில் ஊற்றி டீ பேக்கை டிப் செய்து எடுக்கவும். பிறகு அதிக நேரம் டீ பேக்கை போட்டு வைக்கக் கூடாது. சில வினாடிகளில் எடுத்து விட வேண்டும்.

பின்பு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான, ஆரோக்கிய மான மின்ட் டீ தயார். 

மாலை நேரம், மழை நேரம் மற்றும் தலை வலியாக இருக்கும் போது இந்த டீயைப் பருகினால் நிச்சயமாக மிகவும் ஃப்ரெஷ்ஷாக உணர முடியும். பரிமாறவும்.

நன்மைகள் :

தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மஞ்சள்-புதினா டீ பயனுள்ளதாக இருக்கும். மறுபுறம், புதினா தூக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனையை எளிதில் சமாளிக்க உதவுகிறது.  

மஞ்சள்-புதினா டீ குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஏனென்றால், மஞ்சள் மற்றும் புதினாவில் பல சத்துக்கள் உள்ளன. 
இவை உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேலை செய்கின்றன. இதனால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். அதே சமயம், இந்த டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் தொற்று பிரச்சனையும் நீங்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)