காளான் கொழுப்பை குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பட்டன், சிப்பி, ஷிடேக், எனோகி, ஷிமேஜி, போர்டோபெல்லோ மற்றும் போர்சினி என உண்ணக்கூடிய காளான்கள் பல வடிவங்களில் உள்ளன.
காளான்கள் சிடின் மற்றும் பீட்டா- குளுக்கனின் நல்ல மூலமாகும், இந்த காளான்கள் பல்துறை திறன் கொண்டவை.
அவை உலகெங்கிலும் உள்ள மக்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி, காளான்களை தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர்.
காளான்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நன்மைகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, குறிப்பாக அவை பீட்டா- குளுக்கன்களை கொண்டிருப்பதால் பல நன்மைகளை அளிக்கிறது.
எனவே, பெரும்பாலான உணவுகளைப் போலவே ஊட்டச்சத்து அடர்த்தியான, காளான்களும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன. இன்றைய தலைமுறையின் முக்கிய உணவுளில் ஒன்று காளான்.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த காளான் மற்ற பொருட்களை காட்டிலும் அதிகளவு புரோட்டின், மற்றும் குறைந்த கலோரிகள் உடையதாகும்.
எனவே இது சுவையான உணவாக மட்டுமில்லாமல் சத்தான உணவாகவும் இருக்கிறது. காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதனை அனைவரும் சாப்பிட்டு விட முடியாது.
சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சினைகள் இருக்கும், அப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.
காளானில் பல்வேறு தாதுக்கள் உள்ளன. செலீனியம், பொட்டசியம், தாமிரம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் காளானில் காணப்படுகிறது. இவை பொதுவாக தாவர உணவுகளில் கிடைப்பதில்லை.
ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வழிகள் என்று வரும் போது காளான் ஒரு சக்திமிக்க ஆதாரமாக விளங்குகிறது.
காது சரியா கேட்கமாட்டீங்குதா? முதல்ல இத படிங்க !
தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
அரைப்பதற்கு...
வெங்காயம் - 1
தக்காளி - 2
பட்டை - 1 இன்ச்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 2 சிட்டிகை
வாய் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?
செய்முறை:
காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி யானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் காளானை சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்த மல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான காளான் கிரேவி ரெடி!
குறிப்பு :
காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.